கூட்டத்தில் இருந்து பிரிந்த குட்டி யானையை தாயுடன் சேர்த்த பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர்!!!

 

-MMH

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதி அடுத்துள்ள பன்னி மேடு டிவிஷன் பகுதியில் அதிகளவு யானை கூட்டங்கள் உள்ளன. இந்த யானை கூட்டத்தில் இருந்த ஒரு குட்டி யானை தனியாகப் பிரிந்து குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளது இதனைக் கண்ட குடியிருப்பு வாசிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர் உடனடியாக அங்கு வந்த  வனத்துறையினர் அந்த குட்டி யானையை பிடித்து தாயுடன் சேர்க்கும் முயற்ச்சியில் இறங்கினர்.

அவர்களுடன் அப்பகுதி பொதுமக்களும் சேர்ந்து அந்த குட்டி யானையை பிடித்தனர். அதன் பிறகு வனத்துறையினர் அந்த குட்டி யானையை யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு தாயுடன் சேர்த்து அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. துரிதமாக செயல்பட்டு வழி தவறி வந்த குட்டி யானையை யானை கூட்டத்துடன் சேர்த்த வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன் மற்றும் 

வால்பாறை பகுதி நிருபர் 

-திவ்யகுமார்.

Comments