அதிகாலை நேரத்தில் குடியிருப்பு மற்றும் ரேஷன் கடைகளுக்குள் புகுந்த யானை கூட்டம்!!!

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளில் தற்பொழுது வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

யானை சிறுத்தை கரடி போன்ற வனவிலங்குகள் எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்பு மக்களை அச்சுறுத்தி வருகின்றது. இரவு நேரங்களில் சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் சர்வ சாதாரணமாக குடியிருப்புக்கு அருகில் வந்து செல்கின்றன. எனவே எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் வாழ்ந்து வரும் தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.

நடுமலை எஸ்டேட் பகுதியில் இன்று காலை 4:30 மணி அளவில் யானைக் கூட்டங்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது மேலும் அருகே உள்ள ரேஷன் கடையை உடைத்து அங்குள்ள பொருட்களை எடுத்து சூறையாடி சென்றுள்ளது. இதுபோன்று அனைத்து எஸ்டேட் பகுதிகளிலுமே தற்பொழுது யானைக் கூட்டங்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகள் மற்றும் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையை சேதப்படுத்துவது அதிகரித்து வருகிறது. 


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ரேஷன் கடையில் உள்ள பொருட்களின் வாசனையை நுகர்ந்து வரும் காட்டு யானைகளால் குடியிருப்பு பகுதியும் சேதம் அடைவதாக பொதுமக்கள் கூறுகின்றனர் எனவே குடியிருப்புக்கு அருகில் ரேஷன் கடையை வைக்காமல் வாகனங்களில் கொண்டு வந்து பொருட்களை வினியோகிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன் மற்றும் 

வால்பாறை பகுதி நிருபர் 

-திவ்யகுமார்.

Comments