கோவை ஓ பை தாமரா நட்சத்தி்ர ஓட்டலில் உருவாக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது…!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக  கோவை ஓ பை தாமரா நட்சத்தி்ர ஓட்டலில் உருவாக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது…

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில்,   கிறிஸ்துமஸ் மரம்   முக்கிய பங்கு வகிக்கின்றது. பொதுவாக பசுமை மாறா ஊசியிலை கூம்பு மரங்கள் வீட்டுகுள்ளேயோ வெளியேயோ நிறுத்தப்பட்டு கிறிஸ்துமஸ் விளக்குகளாலும், பேப்பர்களால் செய்யப்பட்ட நட்சத்திரங்கள்,பொம்மைகளை கொண்டு கிறிஸ்துமஸ் மரங்கள் உருவாக்க படுகின்றன.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக தாமரா லீஷர் எக்ஸ்பீரியன்ஸ் நிறுவனத்தின் கோவை ஓ பை தாமரா நட்சத்திர  ஓட்டல் அரங்கில் உருவாக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சுமார் 35 அடி உயரத்தில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ள இதன் துவக்க விழாவில்நிறுவனத்தின் கற்றல் மற்றும் மேம்பாட்டு அதிகாரி அத்ரிதா பானர்ஜி அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில், மின் விளக்குகளால் அழகுற அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் ,மரத்தின் உச்சியில் ஒரு முக்கோண அல்லது நட்சத்திர வடிவம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது..முன்னதாக கிறிஸ்துமஸ் மரத்தை கிறிஸ்துவ பாடல்கள் பாடி,விளக்குகள் ஒளிர விடப்பட்டது..சாண்டா கிளாஸின் தொப்பி ,பரிசு பொருட்கள்,போன்ற கிறிஸ்துமஸுடன் தொடர்புடைய பாகங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்ட இதன் துவக்க விழாவில் ஓட்டல் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், குழந்தைகள்,உட்பட  பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ஓ பை தாமராவின் ஓட்டலின்  பொது மேலாளர் உமாபதி அமிர்தம்,எங்களது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் விதமாகவும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விடுமுறை நாட்களில்  எங்களது ஓட்டலில் பல்வேறு விதமான சிறப்பு நிகழ்ச்சிகளுடன் பல்வேறு விதமான  உணவுகள் பரிமாற இருப்பதாக தெரிவித்தார்.

-சீனி, போத்தனூர்.

Comments