ஓட்டப்பிடாரம் பா.ஜ.க சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நியமனம்.!!!
தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடராம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தொகுதி ஒருங்கிணைப்புலராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் லிங்கராஜ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், உறுப்பினர்கள் உட்பட பல்வேறு பொறுப்புகளை தமிழக தலைவர் அண்ணாமலை நியமனம் செய்துள்ளார்.
ஓட்டப்பிடராம் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளராக நியமன செய்யப்பட்டவர்களை மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ, மாநில பொதுச் செயலாளர் பொன்பாலகணபதி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் ஆகியோர் வாழ்த்தினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.
Comments