ஐ.மு.மு.க-வினர் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

 


மதுரை: பாபர் மசூதி இடிப்பு தினத்தில், சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க கோரி ஐ.மு.மு.க-வினர் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!! 

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கரசேவர்களால் கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி இடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி 06-12-2023  அன்று  பாபர் மசூதி தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


அந்த வகையில், இந்தியாவில் இசுலாமிய சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் வரலாறுகளைப் பாதுகாப்போம் எனும் முழக்கத்துடனும், இந்திய வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991ஐ நடைமுறைப்படுத்தக் கோரியும், சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களை அழிக்கத் துடிக்கும் பாசிச சிந்தனையாளர்களைக் கண்டித்தும் இந்தியாவின் கறுப்பு நாளான திசம்பர் 06 அன்று மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக்  கழகத்தின் சார்பில் மதுரை கோரிப்பாளையத்தில் வடக்கு மாவட்டத்தின் தலைவர் பொறியாளர் பக்ருதீன் அலி அகமத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இதில் மாநிலச் செயலாளர்  சிக்கந்தர், தமிழ்தேச மக்கள் முன்னணியின் தலைவர் தோழர் மீ. தா. பாண்டியன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மதுரை மாவட்டச் செயலாளர்  மணி அமுதன் மா. பா, ஐக்கிய சமூகநீதிப் பேரவையின் மாநில பொருளாளர்  சேக் தாவூத் (எ) அனீஸ், மக்கள் சட்ட உரிமைகள் கழகத்தின்  அண்ணாதுரை, அர்ரஹ்மான் முஸ்லிம் ஜமாத் சகோ முத்து ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டு தங்களது கண்டன உரைகளை நிகழ்த்தி கண்டன கோசங்களை எழுப்பினர். இறுதியாக மாவட்ட பொருளாளர்  அயூப்கான் (எ) பாட்டையா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் A.R. முகமது ரஃபீக், வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் E. பீர் முகமது, மாவட்ட துணை, அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஜமாத்தார்கள், ஆண்கள், பெண்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

- தமிழரசன், மேலூர்.

Comments