பீலா ராஜேஷாக இருந்தவர் பீலா வெங்கடேஷனாக பெயர் மாற்றியதன் பின்னணி என்ன...
கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா தொடங்கியதில் இருந்து தினமும் தொலைக்காட்சியில் தோன்றி செய்தியாளர்களைச் சந்தித்து மருத்துவ அறிக்கையை வெளியிட்டு மீடியா வெளிச்சத்தைப் பெற்றவர் பீலா ராஜேஷ். ஒரு கட்டத்தில் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்திப்பது நிறுத்தப்பட்டது. மருத்துவ அறிக்கைகள் மட்டும் வெளியிடப்பட்டன.
சில நாட்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து புகழ்பெற்றவர் பீலா ராஜேஷ். சமீபத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார். இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆக பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டிருந்தார்.
இவரது கணவர் பெயர் ராஜேஷ் தாஸ். சிறப்பு டிஜிபியாக இருந்தவர். பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறை தண்டனை பெற்றார். அதன்பிறகு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. தற்போது சைலண்ட் மோடிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் தான் தன்னுடைய பெயரை பீலா ராஜேஷ் என்பதில் இருந்து பீலா வெங்கடேசன் என மாற்றி கொள்ள முடிவு செய்திருக்கிறார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதாவது ராஜேஷ் என்ற கணவர் பெயரை நீக்கி விட்டு தந்தை பெயர் வெங்கடேசனை சேர்த்து கொண்டுள்ளார். தனது சமூக வலைதளப் பக்கங்களிலும் பெயரை மாற்றியிருக்கிறார். இந்த பெயர் மாற்றத்திற்கான காரணம் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.
-சி.ராஜேந்திரன்.
Comments