பல்வேறு துறை சார்ந்த சமூக செயல்பாட்டாளர்களுக்கு விருது வழங்கும் முப்பெரும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது!!
கோவை: மனிதநேய ஃபவுண்டேஷன் டிரஸ்ட் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா மற்றும் பல்வேறு துறை சார்ந்த சமூக செயல்பாட்டாளர்களுக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மனித நேய ஃபவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு தொடர்ந்து தினமும் உணவு வழங்கி வருவது,இரத்த தான முகாம்,மருத்துவ சேவை,உள்ளிட்ட பல்வேறு சமூகம் சார்ந்த பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மனித நேய பவுண்டேஷன் டிரஸ்ட் ஐந்தாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு முப்பெரும் விழா, கோவை போத்தனூர் சாலையில் உள்ள பிசி ஃபுட் அரங்கில் நடைபெற்றது. டிரஸ்டின் நிறுவன தலைவர் கோவை சுலைமான் தலைமையில் நடைபெற்ற இதில், மனித நேய பவுண்டேஷன் டிரஸ்ட் ஐந்தாம் ஆண்டு துவக்கம்,இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம் ,மற்றும் சிறந்த சமூக செயல்பாட்டாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பது என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்ச்சியில் டிரஸ்டின்,ஆலோசகர் ஜெம் சாதிக் அனைவரையும் வரவேற்று பேசினார்.ஆலோசகர் சீத்தாராமன் என்ற குமார்,ஒருங்கிணைப்பாளர் உம்மர், துணை ஒருங்கிணைப்பாளர் தாஹீர்,அசார்,உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் தலைவர் ஹாஜி இனாயத்துல்லா, அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ.மருத்துவர் சரவணப்பிரியா,சோமு பிராப்பர்ட்டீஸ் சோமசுந்தரம்,தி.மு.க.மாநகர மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ்,மாநகர் மாவட்ட இளைஞரணி சிங்கை மதன்,கோவை ஃபைசல், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளர் கோட்டை செல்லப்பா,அம்மிக்கல் மணிகண்டன்,மாமன்ற உறுப்பினர் முபஷீரா பத்ருதீன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தன்னலம் பாராமல் சமூக பணியாற்றும் பல்வேறு சமூக அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் மனித நேய பவுண்டேஷன் டீரஸ்ட் உறுப்பினர்கள் ஆகியோருக்கு சிறந்த சமூக செயல்பாட்டாளர் விருது வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் சேவையை முக்கிய விருந்தினர்கள் துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில்,பாலகிருஷ்ணன், ஆசிப் அஹமத் ஷெரீப், சௌகத் அலி, கிதர்முகமது கலீல் வேலுச்சாமி, சித்திக்,நான் கற்றது விக்னேஸ்வரி,மனித நேரய டிரஸ்ட் ரம்லா,விநாயகா டிரஸ்ட் ராஜேஸ்வரி, ஐ.பி.எம்.இச்சால், செல்வபுரம் நசீர், இப்ராஹிம் செல்வகுமார் சித்திக்,சுரபி இன்ஸ்டிட்யூட் சுலோச்சனா அரசன் அஜ்மீர் கான், சிங்கை சுலைமான் ஹக்கீம் மன்சூர், தாஹிர், ஷேக் இம்தியாஸ், கோவை தம்பு, ஷான் பாஷா, சித்திக், இப்ராஹிம், சகாபுதீன், அபுதாஹிர், முஸ்தபா, கிதர் பாஷா , காஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.
Comments