கோவையின் பாரம்பரியமிக்க கோட்டா கோல்டு நிறுவனத்தின் 100வது ஆண்டு விழா!!

நூறு வயது மூத்தவர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசு!!

கோவை: வாடிக்கையாளர்கள் கடை ஊழியர்கள் நலத்திட்ட உதவிகள் நிர்வாகிகள் செந்தில் குமார் .கவிதா தம்பதியினர் ஏற்பாடு

100 வது ஆண்டை கொண்டாடும் விதத்தில் கோவை மாகரில் 100 வயது கடந்த மக்களை பெருமை படுத்தும் விதமாக அவர்களை தங்கள் கடைக்கு அழைத்து வௌ்ளி நாணயம் சிறப்பு வெகுமதியாக கொடுத்து அவர்களை கெளரவிக்க எண்ணியுள்ளார் திரு செந்தில் குமார் திருமதி கவிதா செந்தில்குமார்.

கோட்டா கோல்ட் நூற்றாண்டு முன்னிட்டு (1924–2024) நவ இந்தியா, வாகமான் கோட்டா இடத்தில் பல்வேறு சுவையான நிகழ்வுகளுடன் நடைபெற்றது. இந்த நூற்றாண்டை பெருமைக்கு திருமதி. வனிதா மோகன் அவர்கள் (பிரிக்கால்) மற்றும் திரு K P  இராசாமி அவர்கள் (KPR குரூப்) சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்துள்ளார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

திருவாளர் B.R.நடராஜ் செட்டியார் அவர்கள் 1924 ஆம் ஆண்டில் BRN ஜுவல்லரி என்ற நகைக் கடையை பெரிய கடைவீதியில் துவங்கினார்கள். அதன் பின்னர் திரு.துருக்குமார் அவர்களின் அயராத உழைப்பால் ராஜவீதியில் கோட்டா ஜுவல்லரி என்ற பெயரில் தங்கமான கடையாக உருவெடுத்தது. அதன் பின்னர் அவரின் குமாரர்கள் மூவரின் பங்கும் பெரிதும் வியங்கும் வண்ணம் இருந்தது. அதன் தொடர்ந்து திரு.செந்தில்குமார் அவர்களின் கடின உழைப்பால் இன்று கோட்டா கோல்டு திறம்பட செயல்படுகிறது.

நூற்றாண்டை முன்னிட்டு கோவை மாநகரின் மக்களுக்கும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் பல்வேறு சலுகைகளும், திட்டங்களும் அறிமுக படுத்தப்பட்டுள்ளது. கோவை மக்கள் மனம் மகிழ மரக்கன்றுகள் நடும் திட்டமும், மருத்துவ முகாம் மூலம் பொது மருத்துவம், பராமரிப்பு இல்லாத சிறு கோவில் ஒன்றை பராமரிக்கவும், ஏழை குழந்தைகளின் படிப்பு தேவைக்கு நோட், புத்தகம் வழங்கவும், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடும், மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்விக்கு உதவிடவும் திட்டமிட்டுள்ளதாக திருவாளர் D.செந்தில்குமார், திருமதி கவிதா செந்தில் குமார் இருவரும் மகிழ்வுடன் தெரிவிக்கிறார்கள்

BRN ஜுவல்லரி மற்றும் கோட்டா ஜுவல்லரி பல்வேறு இடங்களுக்கு மொத்த விலையில் BRN ஜுவல்லரி மறறும் கோட்டா ஜுவல்லரி மூலம் பல்வேறு மாநிலத்திற்கு மொத்த விலையில் தங்க நகைகள் செய்து பெரும் தொழில் முன்னேற்றத்தை உருவாக்கினர் இவரின் தனிப்பட்ட முயற்சியின் விளைவாக எண்ணறற நகைகளை உருவாக்கினார் ஜிமிக்கி, நகாஸ், மற்றும் முத்து, பவளம் நகைகளின் பிறப்பிடமாக பல நகைகள் உருவாக்கி மக்களின் தேவைக்கேற்ப பல சாதனைகளை செய்துள்ளார். கோவையில் ஒரு பாரம்பரியமான நிறுவனமாக எங்களது பயணம் நூறாவது ஆண்டில் சேவையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.

-சீனி, போத்தனூர்.

Comments