101 அடி கம்பத்தில் 24 மணி நேரமும் பறக்கும் தேசிய கொடியை ஏற்றி வைத்த காவல் ஆணையர்!!

101 அடி கம்பத்தில் 24 மணி நேரமும் பறக்கும் தேசிய கொடியை ஏற்றி வைத்த காவல் ஆணையர் - முன்கள பணியாளர்களான ஊர்க்காவல் படையினரின் பணிகளை ஊக்குவித்த போலீஸ் கமிஷனர்.

நாட்டின் 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 24மணி நேரமும் பறக்க கூடிய அளவில் 101 அடி கம்பத்தில் தேசியக் கொடியை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்தார்.

இதனை அடுத்து உள் நாட்டு பாதுகாப்பு பணிகளில்,முன்கள பணியாளர்களாக செயல்பட்டு வரும், ஊர்க்காவல் படையினர், திருவிழா, பண்டிகை நேரங்களில்  கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில், கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது, கட்சி தலைவர்கள் வருகையின் போதும், அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஊர்க்காவல் படையினரின் பணிகளை பாராட்டும்  விதமாக  கோயமுத்தூர் இன்னல் வீல் கிளப் சார்பாக ஒரு இலட்சம் மதிப்பிலான  ரிப்ளக்டர் ஜாக்கெட் எனும் பாதுகாப்பு உடை வழங்கும் விழா கோவை மாநகர காவல் துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இன்னர் வீல் கிளப் அமைப்பின் தலைவர் புவனா சதீஷ், கோவை மாநகர ஊர்க்காவல் படை உதவி ஆணையர் தேன்மொழி ராஜராம் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில், கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற இதில், அலுவலக வளாகத்தில் உள்ள பிரம்மாண்ட தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், சுமார் நூறுக்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு ரிப்ளக்டர் ஜாக்கெட்டுகளை வழங்கினார். இரவு நேர பணிகளின் போது ஊர்க்காவல் படையினரின் பாதுகாப்பு கருதி இந்த உடைகள் வழங்கப்பட்டது.

-சீனி, போத்தனூர்.

Comments