விளாத்திகுளத்தில் 14வது தேசிய வாக்காளர் தினம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!!

வண்ண வண்ண கோலங்களில் அசத்திய திருநங்கைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நாட்டின் 14 வது தேசிய வாக்காளர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு என்னும் தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு மற்றும் திருநங்கையர்களுக்கும் மாபெரும் கோலம் போட்டி நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்ப போட்டியில் பள்ளியை சேர்ந்த மாணவிகள் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த திருநங்கைகள் என பலர் கலந்து கொண்டு தங்களது கைவண்ணங்களை காட்டினார்கள். அழகான வண்ண வண்ணமான கோலங்கள் தேர்தல் விழிப்புணர்வு கோலங்கள் மற்றும் நம் தேசிய கொடி கோலங்கள் போட்டு அசத்தியுள்ளனர் அதிலும் குறிப்பாக திருநங்கைகள் கலந்து கொண்டு கோலம் போட சுற்றி பள்ளி மாணவிகள் என்று உற்சாகப்படுத்த என்று கோல போட்டியே ஒரு விழா கோலம் போன்று காட்சியளித்தது.

இதனைத் தொடர்ந்து அனைவரும் தேர்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற திருநங்கைகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் பரிசுகள் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியர் (தேர்தல் பிரிவு) பாலமுருகன். விளாத்திகுளம் வருவாய் ஆய்வாளர் ராணி உட்பட வருவாய்துறை அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டு தேர்தல் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

-பூங்கோதை, விளாத்திகுளம் .

Comments