கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் 16-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது!!

 

கோவை: கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற  16-வது பட்டமளிப்பு விழாவில் இளங்கலை,முதுகலை என 1494 மாணவ மாணவிகள்  பட்டம் பெற்றனர்.

கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் 16-வது பட்டமளிப்ப விழா நடைபெற்றது. கல்லூரியின் செயலாளர் மற்றும் இயக்குனர் டாக்டர் சி. ஏ.வாசுகி தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக கொல்கத்தாவில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வு  மையத்தின் இயக்குனர் டாக்டர் பீரீத்தி பானர்ஜி கலந்து கொண்டு 1494 மாணவ மாணவிகளுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார்.

இதில் மாணவ,மாணவிகளிடையே பேசிய அவர் மாணவ,மாணவிகள் தங்களது எதிர்கால கனவுகளை மிக பெரிதாக காண வேண்டும் என்றும், எதிர்கால இந்தியா வல்லரசாக மாற இளம் தலைமுறை மாணவர்களின் பங்கு மிக அவசியம் என தெரிவித்தார். கல்வி மற்றும் திறன் ஆற்றலோடு இலட்சியத்தை நோக்கி பயணிக்கும் போது உடல் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

குறிப்பாக நாம் நம்மை குறைத்து மதிப்பிட கூடாது எனவும்,உயர்ந்த நிலை எண்ணங்களை வளர்த்தி கொள்ள வேண்டும் என கூறினார்..விழாவில் 1199 இளங்கலை மாணவ மாணவிகள். 252 முதுகலை மாணவ மாணவிகள், 43 முதுகலை  டிப்ளமோ மாணவ மாணவிகள் உள்பட 1494 மாணவ மாணவிகள் பட்டம் பெற்றனர்.

நிகழ்ச்சியில்,கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம் லட்சுமண சாமி,துறை பேராசிரியர்கள்,பெற்றோர்கள்,மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments