பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 ஆவது பிறந்த நாள் விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை...

 

-

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் வீரபாண்டிய கட்டபொம்மனின்  265ஆவது பிறந்த நாள் முன்னிட்டு அவரது கோட்டையில் அரசு சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருஉருவ சிலைக்கு ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ்  அவர்கள்   மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இந்தக்  கோட்டை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரும், ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு உயிரிழந்த வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை ஆகியோர் வாழ்ந்த கோட்டையாகும். இது 35 ஏக்கருக்குமல் பரப்பளவு கொண்டது. இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார் அவர்கள்  ஒட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் முத்துராமன் அவர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ராஜா அவர்கள்  பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர்   கமலாதேவி யேகராஜ் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்கு தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் -முனியசாமி.

Comments