சாய் சில்க்ஸ் கலா மந்திர் காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் சேலம் பஞ்சுக்குழி பட்டியில் 58வது விற்பனையாகம் துவக்கம்...

 

-MMH

சேலம், ஜனவரி 7, 2024 பாரம்பரியமிக்க ஆயத்த ஆடை சில்லறை விற்பனை செய்து வரும் சாய்சில்க்ஸ்,  காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் 58வது கிளையை சேலம் பஞ்சுக்குழிபட்டியில் துவக்கியுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் பிரபலமான நடிகை கல்யாணி பிரியாதர்ஷன் கடையை துவக்கி வைத்தார். இந்த கடையில், அன்றாடம் உடுத்தும் சேலை முதல் மேல்நாட்டு ஆடைகள் வரை பெண்களுக்கும், ஆண்களுக்கும், குழந்தைதகளுக்குமான உடைகள் விற்பனைக்கு உள்ளன.

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வலுவான இடத்தை பெற்றுள்ள இந்த நிறுவனம், பல்வேறு வகையான உயர்ந்த ரக மற்றும் உயர் ரக சேலைகள், லெகங்கஸ் மற்றும் ஆண்கள், குழந்தைகளுக்கான ஆடைகளை விற்பனைக்கு வைத்துள்ளது. 

சாய் சில்க்ஸ் கலாம்திர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் பிரசாத் சாலவாடி பேசுகையில், " சேலம் பஞ்சுகுழிபட்டியில் துவக்கப்பட்டள்ள புதிய பேஷன் கிளையான காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்திற்கு தங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். குடும்பத்தினர்  அனைவருக்குமான ஆடைகளை இங்கு வாங்கி மகிழலாம். ஒரே இடத்தில் அனைத்து வகையான விரும்பி தேர்வு செய்யத்தக்க ஆடைகள் குவிந்துள்ளன. தெலுங்கானாவில் துவக்கப்பட்டுள்ள விரிவாக்க நடவடிக்கையை போன்றே தமிழ்நாடு, சேலத்தில் துவக்கப்பட்டுள்ள இந்த கிளை தேவையான வளர்ச்சியை தரும். மகாசங்கராந்தி நன்னாளில், அளவற்ற மகி்ழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் பெறுங்கள்," என்றார்.

   எஸ்எஸ்கேஎல் பற்றி:

எஸ்எஸ்கேஎல் நிறுவனம், கலாமந்திர், மந்திர், வரமகாலட்சுமி சில்க்ஸ் மற்றும் கேஎல்எம் பேஷன் மால் என்ற நான்கு வெவ்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகிறது. தனது சொந்த இணையத்தளத்தில் இ காமர்ஸ் வழியிலும் விற்பனை மேற்காண்டு வருகிறது. அனைத்து பிரிவினருக்கும், ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்ற வகையில் அனைத்து உடைகளையுள் விற்பனை செய்து வருகிறது. 

கடந்த 2023ம் நிதியாண்டில் 1351 கோடி ருபாய்க்கு விற்பனை செய்து, 97.60 கோடி ருபாய் லாபமாக ஈட்டியுள்ளது. பங்குச்சந்தை முதலீட்டில் முதல் முறையாக பங்குகளை வெளியிட்ட முதல் சேலை விற்பனை நிறுவனமாகவும், 2005 முதல் விரைவாக 58 கிளைகளை 6 லட்சம் சதுரடிகளில் துவக்கிய நிறுவனமாகவும் திகழ்கிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

-சீனி, போத்தனூர்.

Comments