விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் நடைபெற இருந்த போராட்டம் கைவிடப்பட்டது....


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் மற்றும் எட்டையாபுரம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 17. 12. 2023 மற்றும் 18. 12. 2023 அன்று பெய்த அதி கன மழையில் சேதமடைந்த பயிர்களுக்கு முழு நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு வழங்க கோரி அ.இ.அ.தி.மு.க கட்சி சார்பில் 05.01.2024 அன்று காலை 10 மணிக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜ் அவர்கள் அறிவுறுத்தலின்படி முன்னாள் விளாத்திகுளம்  சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்  அவர்கள் தலைமையில் தூத்துக்குடி to மதுரை நெடுஞ்சாலையில் எம். கோட்டூர்  விளக்கில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளதை தொடர்ந்து  வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து இன்று( 4.1.2024) காலை 11 மணியளவில் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது மேற்படி போராட்ட குழுவினர்களான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மற்றும் சுமார் 200 நபர்களுக்கும் மேல் கலந்து கொண்டு  விவசாயிகள் தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

(1) கடந்த மாதம் பெய்த கன மழையில் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் முழு நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு தொகை முழுவதும் வழங்க வேண்டும் என்றும்

(2)நிவாரணம் வழங்கும் ஐந்து ஏக்கர் என்ற வரம்பு நிலையே தளர்த்தி அனைத்து நில பரப்புகளுக்கும் முழு நிவாரணம் வழங்க வேண்டும் மேலும் 5 ஏக்கர் என்ற வரம்பு நிலையை தளர்த்தி மட்டும் நிவாரணம் விவசாயிகளுக்கு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்

(3) பயிர் காப்பீடு lffco Tokio நிறுவனத்தை மாற்றி விட்டு the new India association company ஐ மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் நிறைவேற்றுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்து அறிக்கை அனுப்பப்படும் என்ற விவரம் வட்டாட்சியர் தெரிவிக்கப்பட்டதால் மேற்படி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினை போராட்ட குழுவினர் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு சாலை மறியல் போராட்டத்தினை தற்காலிகமாக கைவிடப்படுவதாக தெரிவித்தனர் இக்கூட்டத்தில் 

மற்றும் அதிமுக பொறுப்பாளர்களும் மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அலுவலர்கள்  விளாத்திகுளம் எட்டையாபுரம் வட்டாட்சியர் விளாத்திகுளம் உதவி இயக்குனர் தோட்டக்கலைத்துறை சார்பாகவும் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் அவர்களும் காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

விளாத்திகுளம் பகுதி நிருபர் 

-பூங்கோதை.

Comments