சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்களின் கலை விழா முதன் முறையாக கோவையில் நடைபெறுகின்றது!!
கோயம்புத்தூர், ஜனவரி 4, 2024 - கோயம்புத்தூர் புரோஜோன் மாலில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்களின் கலை விழா கோவையில் முதன்முறையாக ஜனவரி 13 மற்றும் 14 தேதிகளில் நடைபெறுகின்றது.
இதுகுறித்து புரோஜோன் மாலின் இயக்குனர், திரு. விஜய் பாடியா, திரு. நிதி மற்றும் நிர்வாக தலைவர் திரு. பாபு, மார்க்கெட்டிங் தலைவர் பிரிங்ஸ்டன் நாதன், செயலாக்கத் தலைவர் திரு. முசாமில் ஆகியோர் கூறியதாவது :-
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் மேஜிக் ஷோ, மைம், மியூசிக், அக்ரோபெட் மற்றும் யூனி சைக்கிளிங் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதன் மூலம் பொதுமக்களை சிரித்து மகிழ்விக்க மகிழ்விக்க உள்ளனர். இந்த நிகழ்வானது ஜனவரி 13 மற்றும் 14 தேதிகளில் மதியம் 3.00 மணி மாலை 5.00 மணி மற்றும் 7.00 மணி என மூன்று நிகழ்வுகளாக நடைபெற உள்ளது. இதற்கு நுழைவு கட்டணமாக ரூபாய் 199/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவ மாணவியர்கள் குழுவாக வரும்போது அவர்களுக்கு ரூபாய் 99/- மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்குண்டான டிக்கெட்கள் புரோஜோன் மால் வணிக வளாகத்திலும், ஸ்போர்பி இணையதளத்திலும் கிடைக்கும்.
இந்த நிகழ்விற்கு மீடியா பார்ட்னராக தினமலர் நாளிதழும், அசோசியேட் பார்ட்னராக சந்திரமாரி இன்டர்நேஷனல் பள்ளியும் இணைந்துள்ளார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
-சீனி, போத்தனூர்.
Comments