புரோட்டீன் மற்றும் ஊட்ட சத்தில் பாதாம் பருப்பின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது!!

 

கோவை: தினந்தோறும் தேவைப்படும் புரத சத்தி்ல் பாதாமை எடுத்து கொள்வதன் அவசியம் குறித்து கோவையில் கலிஃபோர்னியா பாதாம் வாரியம் சார்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒவ்வொருவரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு புரோட்டீன் சத்து மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இந்தியாவில் புரோட்டீன் பற்றாக்குறையால் பலர் அவதியுற்று வருகிறார்கள். இந்நிலையில் புரோட்டீன் மற்றும் ஊட்ட சத்தில் பாதாம் பருப்பின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. 

கலஃபோர்னியா பாதாம் வாரியம் சார்பாக நடைபெற்ற இதில், ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமி, வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்ருதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 'இந்தியாவின் புரோட்டீன் பிரச்சினையை போக்க ஒரு இயற்கையான அணுகுமுறை' எனும் தலைப்பில் நடைபெற்ற இதில்,பாதாமின் பல்வேறு பயன்கள் குறித்து உரையாடல் நடைபெற்றது. சமீபத்திய ஆய்வு ஒன்றில், 73 சதவீத இந்தியர்கள் நாளொன்றுக்கு தேவையான புரோட்டீனை எடுத்துக்கொள்வது இல்லை எனவும், 90 சதவீதம் பேருக்கு இதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு இல்லை என தெரிவித்தனர். இதில் இந்தியாவில் உள்ள மக்களிடையே புரோட்டீன் முக்கியத்துவம் பற்றிய புரிதல் இல்லாமை குறித்தும் பாதாம் நமது உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் எப்படி முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதும் குறித்தும் போதுமான அளவு பாதாம் எடுத்துக் கொள்வதன் அவசியம் குறித்தும் பேசப்பட்டது.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

குறிப்பிட்ட அளவில் ஒருவர் தினந்தோறும் பாதாமை எடுத்துக்கொள்ளும் போது புரோட்டீன் குறைபாடு நீங்குவதோடு உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என தெரிவித்தனர். தொடர்ந்து ஊட்டச்சத்து நிபுணரும் ஆரோக்கிய ஆலோசகருமான ஷீலா கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் "ஒருவருடைய உணவில் புரோட்டீன் முக்கியத்துவத்தைப் பொறுத்தவரை, அது போதுமான அளவு மற்றும் தரமாக உட்கொள்ளப்படுவது இன்றியமையாததாகும். உடற்பயிற்சிக்கான உணவுகளின் வணிகமயமாக்கல் அதிகரித்து வரும் சூழலில் புரோட்டீன் சத்துக்களின் அவசியத்தை பலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். இருப்பினும், இயற்கையான உணவுகளில் இருந்து ஒருவருக்கு தேவையான புரோட்டீனை எடுத்துக் கொள்வது என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். புரோட்டீன் சத்து கொட்டை வகைகள், விதைகள், பருப்பு வகைகள், முட்டை, கோழி மற்றும் மீன் ஆகியவற்றில் அதிக அளவில் உள்ளது. சைவ உணவு சாப்பிடுபவர்கள் என்று வரும்போது அவர்களுக்குசோயாபீன்ஸ், பருப்பு வகைகள்மற்றும் பாதாம் போன்ற கொட்டைவகைகளில் உள்ளது. ஜிங்க், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி2 போன்ற சத்துக்களும் பாதாமில் உள்ளது" என்று தெரிவித்தார்.

-சீனி, போத்தனூர்.

Comments