தென் மாவட்டங்களில் பொங்கல் திருநாளை கொண்டாட பனங்கிழங்கு அறுவடை அமோக விளைச்சல்!!
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பரந்து விரிந்து கிடக்கும் தமிழ் மக்கள் அனைவரும் சாதி மதம் வேறுபாடின்றி அனைவரும் கொண்டாட தயாராகி வருகின்றனர். பொங்கலன்று வீடுகளுக்கு முன்பு கோலமிட்டு, பொங்கலிட்டு, மஞ்சள் குலை, பனங்கிழங்கு வைத்து இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டும்,நிலங்களில் நமக்காக உழைத்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையிலும், பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் வைத்தும் விளைந்த மகசூல் அறுவடை செய்யவும், நம் முன்னோர்கள் காலம் முதல் பொங்கல் திருநாளை காலமாக கொண்டாடி வருகின்றனர்.
வாழையடி வாழைபோல், பனையடி பனையாக நமக்கு பின்னரும் சந்ததியினர் தழைத்தோங்க வேண்டும் என்பதால் தைத்திருநாளில் பனைமரத்திற்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும்,பனங்கிழங்கு வழிபாடு முக்கியமானதாக உள்ளது. தென்மாவட்டங்களில் பனைமரங்கள் இல்லாத கிராமங்களே கிடையாது. பனை மரத்தில் அடி முதல் நுனிவரை அத்தனை பாகங்களும் இயற்கையுடன் ஒன்றி பயனளிக்கக் கூடியவை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடந்த காலங்களில் மழை சராசரியை விட குறைவாக பெய்ததால் கிழங்கு திரட்சியின்றி காணப்பட்டது. இது குறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் கூறியதாவது இந்தாண்டு பெருமழை காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்குஇந்தாண்டு பனங்கிழங்கு திரட்சியாக உள்ளது நிலத்தில் ஊன்றப்பட்ட கொட்டைகள் எவ்வித பாதிப்புமின்றி கிழங்காகி உள்ளது இதனால் இந்தாண்டு எங்கு காணினும் பனங்கிழங்கு வரத்து அதிகமாக உள்ளது இதனால் கடந்த காலங்களில் பனைத்தொழிலாளர்களிடம் ரூபாய் 4 க்கு கொள்முதல் செய்து 8ரூபாய் வரை வியாபாரிகள் விற்றனர்.
இந்தாண்டு வரத்து அதிகமானதால் 3 ரூபாய்க்கு மொத்த கொள்முதல் செய்து 5 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இந்தாண்டு பனை மரங்களில் பதநீர் தரும் பாலை முன்கூட்டியே தென்படுகிறது. வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்தவுடன் பனைத்தொழில் சூடு பிடிக்கும். இருப்பினும் பனைத்தொழில் கஷ்டமானது என்பதாலும், ஆண்டு முழுவதும் இத்தொழில் செய்ய முடியாது, இலாபகரமான தொழில் இன்றி சொற்ப இலாபமே இருப்பதால் பனைத்தொழில் புரிவோர் பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களே உள்ளனர். இளைய தலைமுறையினரும் இத்தொழில் புரிய முன்வர வேண்டும். பனைத்தொழில் செய்வோரை அரசு ஊக்கப்படுத்திஉதவிகள் செய்ய வேண்டும் இவ்வாறு கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி
Comments