கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலை மறியல்!!


தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட சிதம்பர்நகர் பகுதியைச் சேர்ந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் என்பவர் தனது வீட்டின் அருகில் உள்ள பொதுப் பாதையை ஆக்கிரமிப்பு இருப்பதாக அதனை அகற்றி தர வேண்டும் என்றும் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அப்பகுதி பொதுமக்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் அந்த பாதை  பிரச்சினையினால் இந்து கிறிஸ்துவ மதப் பிரச்சினையை தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு வைத்து உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுத்து பாதை ஆக்கிரமிப்பு மீட்டு தர வேண்டும் என்ற சிதம்பரம் நகர் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இது அறிந்த வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் இன்று மாலை 3 மணிக்கு எதிர் தரப்பினரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படும் என கூறி சென்றார். இதை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்கு செல்லாமல் மதிய சாப்பாடு உண்ணாமல் தங்களுக்கு தீர்வு வேண்டும் என்று கூறி வட்டாட்சியர் அலுவலகத்திலேயே காத்திருந்தனர்.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பொழுது மாலை மணி 3 மணிக்கு மேல் ஆகியும் நடைபெற வேண்டிய பேச்சு வார்த்தைக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் எதிர் தரப்பினர் வராத காரணத்தால் நேரம் காலதாமதம் ஆனதால் ஆத்திரமடைந்த சாம்பார் நகர் பொதுமக்கள் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு கொட்டும் மழையிலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பள்ளி கல்லூரி வாகனங்கள் முதல் அரசு போக்குவரத்து வரை அனைத்தும் வாகனங்களின் போக்குவரத்து 30 நிமிடம் மேலாக பாதிக்கப்பட்டது. பொதுமக்களின் சாலை மறியல் காரணமாக காவல்துறையினர் சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணனை தொடர்பு கொண்டு விரைந்து வர செய்தனர். இதை அடுத்து சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்கள் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் கூட்டத்திற்கு  வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் னை  உங்கள் மீதுள்ள புகாருக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் உடனே வர வேண்டாமா என்று கண்டித்து அதோடு கூட்டத்திற்கு வருகை தரவேண்டிய இரு தரப்பினரையும் கூப்பிட்டு இருதரப்பினரிடையும் பேச்சுவார்த்தை நடத்திய விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் தனது வீட்டின் அருகில் ஆக்கிரமிப்பு செய்துள்ள பாதையை அவரது பட்டாவில் இருந்து ரத்து செய்வதாக உத்தரவிட்டு அதனை உடனடியாக கோட்டாட்சியருக்கு அனுப்பி ஒரு வார காலத்திற்குள் ஆணையை பிறப்பிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு ஆற்றப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

விளாத்திகுளம் நிருபர் 

-பூங்கோதை.

Comments