வால்பாறையில் தேயிலைத் தவிர மாற்றுத்தொழில் வேண்டும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை...
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நேற்று நடைபெற்றது.. முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர், மாவட்ட வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் முக்கிய துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் திருப்பூர் நகராட்சி மண்டல இயக்குனரிடம் வால்பாறை CPIM கட்சியின் பொதுச் செயலாளர் P.பரமசிவம் வால்பாறையில் தேயிலை இல்லாத மாற்றுத் தொழில் கொண்டுவர வேண்டுகோள் விடுத்ததோடு இதுகுறித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.
மனுவில், வால்பாறையில் தேயிலைத் தவிர மாற்றுத்தொழில் இல்லாமல் இப்பகுதியில் இருக்கும் படித்த இளைஞர்கள் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றன கடந்த 10 ஆண்டுக்கு முன்பு இருந்த மக்கள் தொகையும் மிகவும் குறைவு இயற்கை மிகுந்த பகுதியில் வால்பாறை முடீஸ் சோலையார் டேம் அதிக பகுதிகளை செயல்பட்டு வந்த நகர கூட்டுறவு வங்கி மூலம் வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதியில் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்பவருக்கு கூட்டுறவு வங்கி மூலம் மாடு வளர்ப்பதற்கான குறைந்த வட்டியில் கடன் உதவி செய்து மாடு வளர்ப்பதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும் இதன் மூலம் வால்பாறை முடிஸ் சோலையார் டேம் கருமலை ரொட்டிக்கடை ஆகிய பகுதிகளில் பால் பண்ணைகளை வைத்து படித்த இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கலாம் எஸ்டேட் பகுதிகளில் பாதுகாப்பான மாட்டுப்பட்டிகள், அதற்கு மின் இணைப்பு குடிநீர் வசதியும் செய்து கொடுத்து அதை பராமரிப்பதற்கும் மாடுகளை தேயிலைச் செடிகளுக்கு போகாமல் பாதுகாப்பதற்கும் எஸ்டேட் வீதம் இருவரும் நியமித்து பராமரிக்கலாம்,
அதற்கான தொகையும் மாதமாதம் அவர்கள் எஸ்டேட் நிர்வாகம் மூலம் அவர்கள் கணக்கில் பிடித்து நகர கூட்டுறவு வங்கிக்கு அனுப்பலாம் அல்லது நேரடியாக வங்கியில் கடன் தொகையுடன் பராமரிப்பு தொகையும் செலுத்தலாம். வனவிலங்கு தொல்லை இருந்தாலும் வனவிலங்குகளுக்கு காப்பீடு செலுத்தி இதையெல்லாம் செய்து கொடுத்தால் தேயிலை இல்லாமல் இப்பகுதியில் இருக்கும் பொது மக்களுக்கும் படித்த இளைஞர்களுக்கும் பால் பண்ணை வைத்து மாற்று தொழிலை செய்யலாம். இதன் மூலம் இங்கு கிடைக்கும் பால்களை பொள்ளாச்சி போன்ற பகுதிக்கு அனுப்பலாம் இதை கருத்துக் கொண்டு மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் வால்பாறை பகுதியில் உள்ள நலிவடைந்த கூட்டுறவு வங்கிகளுக்கு நிதி ஒதுக்கி இப்பகுதியில் இருக்கும் பொதுமக்களே பாதுகாக்கலாம் தேயிலைத் தொழில் மட்டும் உள்ளதால் பணி ஓய்வுக்கு பின் இந்த வேலையை நம்பி இருப்பவர்களுக்கு வேறு வழி இல்லை குடியிருக்க விடும் இல்லை இவர்கள் அனைவரும் தேயிலை செடிக்கு உரமாகிறார்கள்.
இதைக் கருத்தில் கொண்டு அவர்கள் குடியிருக்கும் வீட்டு அவர்கள் இருக்கும் ரை பயன்படுத்திக் கொள்ளவும் நகர கூட்டுறவு வங்கி மூலம் தொழில் மாடு வளர்ப்பதற்கும் கடன் உதவி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் இவ்வாறு அனைத்து எஸ்டேட் பகுதி மாடு வளர்ப்பதால் நோய் தொற்று ஏற்படாமல் இருக்கும் அது மட்டுமல்லாமல் மாட்டுச்சாணங்கள் இயற்கை உரங்கள் தயாரிப்பதற்கும் அதன் மூலம் இயற்கை காய்கறிகளை இப்பகுதியில் தோட்டக்கலை மூலம் பயிர் செய்து பல பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கலாம் என்பது தாங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதன் மூலம் இங்கிருந்து சென்ற தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இப்பகுதிக்கு வருவார்கள். இதன் மூலம் வளமான வால்பாறை உருவாக்கலாம் என்று தாங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.
Comments