குறுகிய வளைவு மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்துவதால் அடிக்கடி ஏற்படும் விபத்துகள்!!!


கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர் சிலர் பாதுகாப்பற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்தி ஆற்றில் இறங்கி குறிப்பது மற்றும் அந்த பகுதியில் நின்று கொண்டு புகைப்படங்கள் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


வால்பாறையில் இருந்து நடுமலை செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் அருகாமையில் உள்ள ஆற்றில் சுற்றுலா பயணிகள் இறங்கி குளிக்கின்றனர் இது மிகவும் குறுகலான பகுதியாகும் இந்த இடத்தில் சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களை அங்கங்கே நிறுத்திவிட்டு செல்வதால் மற்ற வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது மேலும் சுற்றுலா பயணிகள் அத்துமீறி பாதுகாப்பற்ற பகுதியில் குளித்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் நேற்று இருசக்கர வாகனத்தில் கக்கன் காலனி பகுதியை சேர்ந்த கதிர் பிரசாத் சுரேஷ்பாபு ஆகியோர் சென்றுள்ளனர் அப்பொழுது அந்த உங்களால இடத்தில் வாகனத்தின் தடுமாறி கீழே விழுந்து இருவரும் படுகாயம் அடைந்தனர் இதுவரையும் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அழைத்து சென்றனர் அங்கிருந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அவர்களுக்கு அங்கு மேல் சிகிச்சை நடைபெற்று வருகிறது.


விபத்து நடைபெற்ற இடத்தில் அடிக்கடி விபத்து நடைபெறுவதாகவும் கடத சில நாட்களுக்கு முன்பு கூட அங்கு டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் எனவே இந்த பகுதியில் சுற்றுலாப் பயணிகள் யாரும் குளிக்கவோ வண்டி வாகனங்களை நிறுத்தவோ கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர் மேலும் எஸ்டேட் நிர்வாகத்தார் அந்த இடத்திற்குள் நுழைய முடியாதபடி கம்பி வேலிகள் அமைக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.

Comments