கோவை துடியலூர் ஆறு வயது சிறுவன் புதிய உலக சாதனை படைத்துள்ளார்!!

 


கோவை உருமாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன், ரம்யா ஆகியோரின் மகன் லோகித் ஸ்ரீனிவாசன். ஆறு வயதான சிறுவன் லோகித்  இரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில், துடியலூர் பகுதியி்ல் உள்ள மிஸ்டர் தேவ்ஸ் சர்வதேச அகாடமியில் திறன் மேம்பாட்டு பயிற்சியையும் கூடுதலாக பயின்று வருகிறார். இந்நிலையில் லோகித்தின் நினைவாற்றல்  திறமையை கண்ட அகாடமியின் நிர்வாக இயக்குனரும் பயிற்சியாளருமான  தர்ம தேவ் சிறுவனுக்கு தனியாக பயிற்சி அளித்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் சிறுவன் லோகித் 52 மற்றும் 46 ஆங்கில எழுத்துக்களை கொண்ட அறிவியல், மருத்துவம், தொல்லியல், ஆங்கில சொற்றொடர் உள்ளிட்ட துறை சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட ஆங்கில சொற்களை கூறி அசத்தியுள்ளார். குறிப்பாக ஆங்கில எழுத்துக்களை தனித்தனியாக கூறியும், அதே நேரத்தில் முழுமையான சொல்லாகவும், அதன் ஆங்கில பொருளையும் ஐந்து நிமிடம் பதினேழு விநாடிகளில்  கூறி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

சிறுவன் லோகித்தின்  இந்த அரிய சாதனை ஆசியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. சிறுவன் லோகித் இதே போல 200 நாடுகளின் பெயர்களை கூறி ஏற்கனவே ஒரு  உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நிலையில், தற்போது ஆறே மாதத்தில் மீண்டும் ஒரு சாதனை செய்துள்ளது குறிப்பிடதக்கது. சிறுவன் லோகித்தை மிஸ்டர் தேவ்ஸ்  அகாடமியில் பயிற்சி பெற்று  வரும் சக மாணவ மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


மேலும் இதில் சிறுவன் லோகித் 52 மற்றும் 46 ஆங்கில எழுத்துக்களை கொண்ட அறிவியல், மருத்துவம், தொல்லியல், ஆங்கில சொற்றொடர்  உள்ளிட்ட துறை சார்ந்த 16  ஆங்கில சொற்களை கூறி அசத்தியுள்ளார்.

மேலும் நிமோனோஅல்ட்ராமிக்ரோஸ்கோபிக்சிலிகோவோல்கானோகோனியோசிஸ் - 46 எழுத்துக்கள்; Aequeosalinocalcalinoceraceoaluminosocupreovitriolic - ஆங்கிலத்தில் 52 எழுத்துக்கள் நீளமான 2023 சொல் ஆகும்.

-சீனி, போத்தனூர்.

Comments