அயோத்தி ராமர் பிரதிஷ்டை விழா முன்னிட்டு யாகவேள்வி துதிபாடல் பாடி பஜனை நடத்தி வருகின்றனர்!!


கோவை புது சித்தா புதூரில் அயோத்தி ராமர் பிரதிஷ்டை விழா முன்னிட்டு குழந்தைகள் ராமர் சீதை வேடமிட்டு யாகவேள்வி துதிபாடல் பாடி பஜனை ராமநவமி பக்த குழுவினர் நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை, புது சித்தா புதூரில் உள்ள பாலாஜி நகர், முத்துமாரியம்மன் கோயிலில், பாப்பநாயக்கன்புதூர், சித்தா புதூர் பகுதி சார்ந்த ராமநவமி பஜனை குழுவினர், அயோத்தி ராமர் பிரதிஷ்டை விழா முன்னிட்டு பக்த பஜனை சங்கத்தினர் ஏற்பாட்டில்  அயோத்தி ராமரின் திரு உருவபடத்திற்கு முன்பு மலர்களால் அலங்கரித்து, பெண்கள், குழந்தைகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு  ராம நவமி பாடல்கள் பாடியும், துதிபாடல், பஜனை, பெண்கள் நடனம் ஆடி ராமர் பிரானுக்கு பிராத்தனை செய்தனர்.

நிகழ்ச்சியில் ராம பிரானுக்கு பிடித்த இனிப்புகளை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். குழந்தைகள் ராமர், சீதை, லட்சுமணனர் வேடமிட்டு ஆடி பாடி பஜனை செய்தனர்.

தொடர்ந்து ராமநவமி பஜனை குழுவினர் ஜெகநாதன், பாலமுருகன், பத்மநாபன் ஏற்பாட்டில் அயோத்தி ராமர் திரு உருவபடம், மஞ்சள் அட்சதை வழங்கினர். பகல் 12.30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

-சீனி, போத்தனூர்.

Comments