கோவில்பட்டியில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி...

 

கோவில்பட்டி ஜேசிஐ சார்பில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி டிஎஸ்பி அலுவலகம் முன்பு நடந்தது. நாடு முழுவதும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது.டிஎஸ்பி அலுவலகம் முன்பு துவங்கிய பேரணி எட்டையாபுரம் ரோடு ஆர்டிஓ அலுவலகம்வழியாக மீண்டும் டிஎஸ்பி அலுவலகத்தை வந்தடைந்தது.இதில் நாடார் மேல்நிலைப்பள்ளி, வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி,நாடார் நடுநிலைப்பள்ளி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி,காமராஜ் காமராஜ் இன்டர்நேஷனல் பள்ளி,உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சிக்கு ஜேசிஐ தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். ஜேசிஐ முன்னாள் தலைவர்கள் கண்ணப்பன், முரளி கிருஷ்ணன்,தீபன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட இயக்குனர் சியாம் சுந்தர் அனைவரையும் வரவேற்றார். சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு பேரணியை கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஜேசிஐ நிர்வாகிகள்,ரகுபதி,அகிலேஷ், சூர்யா,லோகேஷ்,உதயா , வீனாபிரகாஷ்,சுரேந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜேசிஐ செயலாளர் அருண் பிரசாத் நன்றி கூறினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் -முனியசாமி.

Comments