கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது!!
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி கல்வியியல் கல்லூரியில் பட்டம் ஏற்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. கல்லுாரியின் தலைவர் டாக்டர் தங்கவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரியின் செயலாளர் சாந்தி தங்கவேலு மற்றும் கல்லுாரியின் துணைத் தலைவர் அக்ஷய் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் சித்ரா அனைவரையும் வரவேற்று கல்லூரியின் செயல்பாடுகளை பற்றி அறிக்கை சமர்பித்தார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) முனைவர் கே.முருகவேல் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
அப்போது பேசிய அவர்,வருங்கால சந்ததியினரை உருவாக்கக் கூடிய பொறுப்பு ஆசிரியர் கையில் உள்ளது என்றும் இங்கு பட்டம் வாங்குபவர்களில் பெரும்பாண்மையோர் பெண்கள் என்றும் பெண்களுக்கு சமுதாயத்தில் அதிகமான பொறுப்புகள் உண்டு என்றும் கூறினார். நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராக,கலந்து கொண்ட தினமணி பத்திரிக்கை ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசுகையில் ஆசிரியராக இருக்கக் கூடிய நீங்கள் உங்கள் வகுப்பில் ஒரு மாணவரையாவது ஆசிரியராக உருவாக்க வேண்டும் என்று கூறினார். உவே.சாமினாத ஐயர் தன் ஆசிரியர் மீது வைத்துள்ள மரியாதையை எடுத்துகாட்டுடன் விளக்கினார். பட்டமளிப்பு விழாவில் 110 பி.எட் மாணவர்களும், 76 எம்.எட் மாணவர்களும், பட்டங்களை பெற்றனர். நிகழ்ச்சியில் கல்லூரி துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்.கள் என பலர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.
Comments