தூத்துக்குடி பாராளுமன்ற வேட்பாளர் தேர்வு!! கோவில்பட்டியில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்!! பொதுக்கூட்டத்தில் கடம்பூர் ராஜூ அவர்கள் தகவல்!!


 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் லாயல்மில் காலணி எம்ஜிஆர் திடலில் நேற்று மாலை நடைபெற்றது. முதலில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்து கருப்பன் அவர்கள் கலந்து கொண்டார். பொதுக் கூட்டத்தில்  முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு பேசுகையில்:   இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து தியாகம் செய்து இன்ணுயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

WATCH VIDEO HERE...

திமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நிம்மதியாக இல்லை. இந்த ஆட்சி போனால் தான் எங்களுக்கு விடியல் என மக்கள் புலம்பும் நிலையில் உள்ளனர். ஐந்து வருடம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆண்ட போதும் தற்போது திமுக ஆட்சி வந்த பின்பும் தான் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் மக்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தார்கள் என்று உணர்கிறார்கள். நிழலின் அருமை வெயில் வந்த பின்பு தான் தெரியும். ஒரு தொண்டன் கூட முதலமைச்சராக முடியும் என ஒரு இயக்கம் உண்டு என்றால் அது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான்.


நீட் தேர்வு ரத்து மக்களிடமும் மாணவர்களிடம் இந்த விடியல் ஆட்சி ஏமாற்றிக் கொண்டு வருவதற்காக வரும் தேர்தலில் மக்கள் நல்ல திர்ப்பை வழங்க வேண்டும். மத்தியில் காங்கிரசு பிஜேபி அரசால் தமிழ் நாட்டில்  வளர்ச்சியும் இல்லை மாநில  பிரச்சனை காவிரி முல்லை பெரியார் உச்ச நீதிமன்ற சென்று அதிமுக ஆட்சியில் தீர்வு காணப்பட்டது. கச்சத்தீவு பிரச்சினைகள் 5 ஆண்டுகள் ஆகிவிட்டு பாஜக அரசு நாடகம்  போட்டுக் கொண்டிருக்கிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை  அடிக்கல் நாட்டி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது இதனால் தேசிய  கட்சியுடன் கூட்டணி இல்லையென அதிமுக அறிவித்தது.

இந்த நிகழ்ச்சியில்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன்  அவர்கள்  விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  சின்னப்பன்  அவர்கள்  தலைமைக் கழகப் பேச்சாளர் கோதை தங்கவேல் கோவில்பட்டி நகர செயலாளர் விஜய பாண்டியன் ஒன்றிய செயலாளர் அன்புராஜ் வண்டானம் கருப்பசாமி இளம் பெண்கள்  பாசறை செயலாளர் கவியரசன் சத்யா மாவட்ட தலைவி மாவட்ட இணைச்செயலாளர் பேச்சியம்மாள் முடுக்காலங்குளம்  சாமிராஜ்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட  மாணவரணி சின்னத்துரை ஒட்டப்பிடாரம்  இளைளுரணி செயலாளர் தினேஷ் அம்மா பேரவை செயலாளர் கண்ணன் பொதுமக்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,

-முனியசாமி.

Comments