தலை முடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிரமாண்ட விக்கோமேனியா ஸ்டோர் திறப்பு!!


கோவை பாப்பநாயக்கன்பாளையம் பாரதியார் சாலையில் தலை முடி பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக பிரமாண்ட விக்கோமேனியா ஸ்டோர் திறக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விக்கோமேனியா (ஹேர் எக்ஸ்டன்ஷன்ஸ், விக்ஸ் மற்றும் ஹேர்பீசஸ்) ஸ்டோர் திறப்பு விழா நடைபெற்றது. கோவை பாரதியார் சாலை பாப்பநாயக்கன்பாளையம் பாளையம், அமைந்துள்ள விக்கோமேனியா ஸ்டோரினை கவிஞர் மற்றும் திரைப்பட நடிகர் சினேகன் மற்றும் கன்னிகா ஆகியோர் திறந்து வைத்தனர்.

தொடர்ந்து ஆலம் விழுதுகள் தலைவர் மீனா ஜெயக்குமார் மற்றும் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சரஸ்வதி கண்ணையன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து சிறப்பித்தனர்.ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் தலைமுடி பிரச்சினைகளுக்கு சிறப்பான தீர்வினை அளிக்கிறது விக்கோமேனியா.ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை, முடி குறைதல், அதிக முடி உதிர்வால் ஏற்படும் தலை முடி இழப்பு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் உண்மையான மனித தலைமுடியாலும் மற்றும் ஜப்பானிய ஹை ஹீட் ஃபைபர் தொழில் நுட்பத்தாலும் உருவாக்கப்பட்ட விக்குகளை இங்கு பெற முடியும். பெண்களுக்கு ஏற்படும் தலை வழுக்கை திட்டுகள், முடி உதிர்வு மற்றும் மருத்துவ காரணங்களால் ஏற்படும் தலைமுடி இழப்பு பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு சிறப்பான தீர்வினை இங்கு பெற முடியும். 100 சதவீதம் மனித முடியால் தயாரிக்கப்பட்ட டாப்பர்கள், லேஸ் ஃபிரன்ட் குளோசர்கள் மற்றும் அழகிய விக்குகள் இங்கு கிடைக்கின்றன.

இவை இயற்கையான தோற்றத்தையும் மற்றும் எளிதாக அணியும் வசதியையும் வழங்குகிறது. மெலிந்த முடியை மறைப்பதற்கும் மற்றும் உங்களது ஸ்டைலை மேம்படுத்துவதற்கும் உகந்ததாக உள்ளது.

-சீனி, போத்தனூர்.

Comments