இளம் மாணவர் விஞ்ஞானிகள் திட்டத்தில் பயிற்சி பெற்று அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்!!

கோவை: இளம் மாணவர் விஞ்ஞானிகள் திட்டத்தில் பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களின் படைப்புகளின் கண்காட்சி. புதிய புதிய கண்டுபிடிப்புகளை காட்சிபடுத்தி அசத்திய மாணவர்கள்.

தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் இளம் மாணவர் விஞ்ஞானிகள் திட்டத்தை (YSSP) செயல்படுத்தி மாணவர்களை ஊக்குவித்து வருகிறது. இதன் அடிப்படையில் கோவை சரவணம்பட்டி கே.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கான திட்ட மையத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் 82 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் 15 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தபட்டது. 

இது மாணவர்கள் தங்கவைத்து பயிற்சி அளிக்கும் திட்டமாகும். அங்கு ஆரோக்கியமான உணவு மற்றும் இலவச தங்குமிடம் வழங்கப்பட்டது. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணினி அறிவியல் போன்ற பல்வேறு அறிவியல் பிரிவுகளில் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மற்றும்  விழிப்புணர்வு வகுப்புகள் மூலமாக பயிற்சி பெற்றனர். ஜிம், தற்காப்புக் கலை, யோகா போன்ற இணை கல்விப் பகுதிகளும் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன. திறன் மற்றும் விருப்பமான திறன், தகவல் தொடர்பு திறன், மென் திறன் மற்றும் வாழ்க்கை திறன் ஆகியவற்றால் மாணவர்கள் மேம்படுத்தபட்டனர். 


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாணவர்கள் பயிற்சி மற்றும் அமர்வுகளை மிகவும் ரசித்ததோடு பாரதியார் பல்கலையின் மூலிகை தோட்டம் மற்றும் தாவரவியல் ஆய்வு கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு ஆய்வுகூடங்களின் செயல்பாடுகளை தெரிந்து கொண்டனர். மருத்துவ தாவரங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மன நலம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான அமர்வுகள் மாணவர்களுக்கு அமைதியை அளித்தன. 

இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்களது விஞ்ஞானி ஆராய்ச்சி அறிவை பயன்படுத்தி பல்வேரு புதிய புதிய பொருட்களை உருவாக்கி காட்சி படுத்தினர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மூத்த தொழில்நுட்ப இயக்குனர்,AT&T, நியூ ஜெர்சி அமெரிக்கா திருமலை இளங்கோ கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றி சான்றிதழ் வழங்கினார் உடன் ஒய்எஸ்எஸ்பி ஒருங்கிணைப்பாளராக டாக்டர்.எஸ்.ஷர்மிளாவும் முதல்வர் டாக்டர்.ரத்தினமாலா செயலாளராக, உதவி ஒருங்கிணைப்பாளர் ஒய்எஸ்எஸ்பி கீதா ரமணி ,டாக்டர்.பி வனிதா உள்ளனர்.

-சீனி, போத்தனூர்.

Comments