கொள்ளையடிக்க லாட்ஜில் அறை எடுத்து தங்கி திட்டம் போட்ட கும்பல்!! இளம் பெண் உட்பட ஆறு பேர் கைது!!!

 

கோவை விளாங்குறிச்சி அம்பேத்கர் ரோட்டில் லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இங்கு  பெண் ஒருவர் வந்தார். அவர் ரூ.1750 தினசரி வாடகையில் அறை புக் செய்தார். மறுநாள் காலை 2 வாலிபர்கள் அந்த அறைக்கு சென்று பெண்ணை சந்தித்து பேசி விட்டு சிறிது நேரத்தில் சென்று விட்டனர். அறை புக் செய்து 24 மணி நேரம் கழித்து லாட்ஜ் வரவேற்பாளர் அந்த பெண்ணிடம் அறையை காலி செய்யும் படி கூறினார். அதற்கு அந்த பெண் மேலும் சில நாட்கள் தங்குவதாக தெரிவித்துள்ளார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்னர் அந்த பெண் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு வந்த 2 வாலிபர்கள் அந்த அறையில் தங்கினர். இதனையடுத்து  இளம்பெண் உட்பட மேலும் 4 பேர் அங்கு வந்தனர். அதற்கு லாட்ஜ் நிர்வாகத்தினர் ஒரு அறையில் 2 பேர் மட்டுமே தங்க முடியும் என அவர்கள் தங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  அவர்கள் சிறிது நேரத்தில் சென்றுவிடுவதாக தெரிவித்தனர். அதற்கு அனுமதி மறுத்த லாட்ஜ் நிர்வாகத்திடம் அந்த கும்பல் குடிபோதையில் தகராறு செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உரிமையாளரிடம் விவரத்தை தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த அறையை சுத்தம் செய்த ஊழியர்கள்  மூலம் அங்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ரகசியமாக பீளமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த 6 பேர் கும்பலை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் ஆயுதங்களுடன் லாட்ஜில் அறை எடுத்து தங்கி கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து போலீசார் கொள்ளையடிக்க திட்டமிட்ட கோவில்பாளையம் கருப்பராயன் கோயில் தெருவை சேர்ந்த யுகேஷ்(22), சரவணம்பட்டியை சேர்ந்த அப்துல் சமத்(20), நவீன் சக்தி(20), எஸ்எஸ் குளத்தை சேர்ந்த இம்மானுவேல்(21), ஒண்டிப்புதூரை சேர்ந்த ஆகாஷ்(20), காளப்பட்டி நேருநகரை சேர்ந்த ரேகா ஜெனிபர்(18) ஆகிய 6 பேர்  கொண்ட  கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆயுத தடை தடுப்பு சட்டத்தில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக  

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments