கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இந்தியா புதிய இந்தியாவாக உருவெடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம் தெரிவித்துள்ளார்!!

 


கோவை: கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இந்தியா புதிய இந்தியாவாக  உருவெடுத்துள்ளதாகவும் தொழில்நுட்ப கட்டமைப்பு மிகவும் வலு பெற்றுள்ளதாகவும் மத்திய மின்னனு மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே ஜி ஐ எஸ் எல் கல்வி குழுமம் சார்பில் எதிர்கால நகர்வு தொழில்நுட்ப மையம் எனும் புதிய மையம் துவக்க விழா நடைபெற்றது. கல்வி குழும தலைவர் அசோக் பக்தவச்சலம்  தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்,கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக  மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மையத்தை துவக்கி வைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய அவர்,இந்தியா தற்போது புதிய இந்தியாவாக கடந்த 10 ஆண்டுகளில் உருவெடுத்துள்ளதாகவும் தொழில்நுட்ப கட்டமைப்பு மிகவும் வலு பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். பத்தாண்டுகளுக்கு முன்பு பின்தங்கி இருந்த இந்திய பொருளாதாரம் இன்று உலகிலேயே சிறந்த பொருளாதார நாடு என்ற அளவில் முன்னேறியுள்ளதாகவும் கூறியதுடன், உலக அளவில் ஐந்தாவது பொருளாதார வல்லரசாக உள்ள நிலையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் மூன்றாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார். 


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது இன்றைய இளைஞர்கள் அரசியல் பிரதிநிதிகளாக மாறுவதற்கு முக்கிய வழி வகுப்பதாகவும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் சிறப்பான ஆட்சியே நாட்டின் தொழில்நுட்ப வளர்சிக்கு காரணம் என்றும் கூறிய அவர், கடந்த 2014 ஆம் ஆண்டு வரை செல்போன்கள் சர்வதேச நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் உள்நாட்டிலேயே பல செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியை துவங்கியதன் அடிப்படையில் இன்று உலகிலேயே மிகப்பெரிய செல்போன்கள் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 

தொடர்ந்து விழாவில் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற ஹேக்கத்தான் போட்டிகளில் வெற்றி பெற்ற கே.ஜி.ஐ.எஸ்.எல்.கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி அவர் கவுரவித்தார்.

-சீனி, போத்தனூர்.

Comments