3ஆவது டெஸ்டில் இருந்து திடீரென விலகிய அஸ்வின்!!!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. 

இதையடுத்து இந்தியா அணியின் பிரதான ஸ்பின்னராக இருந்து வரும் ரவிச்சந்திரன் அஸ்வின், குடும்ப அவசரம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.  

அதனால் கடைசி 3 நாட்களில் 10 வீரர்கள் மற்றும் 1 மாற்று வீரருடன் இந்தியா விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும்  இந்த டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments