இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 ரன்கள் குவிப்பு!!


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், அடுத்து இரு டெஸ்டுகளில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது.

டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் ஜோ ரூட் 122 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி சார்பில் ஜடேஜா 4, ஆகாஷ் தீப் 3, சிராஜ் 2, அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர்..

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments