பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினம் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் அணிவித்து மாலை மரியாதை.!!!
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 55வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது . அதைத் தொடர்ந்து தூத்துக்குடி அதிமுக சாா்பில் வா்த்தகா் அணி மாநிலச் செயலா், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினா், பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். பின்னர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்,
மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலரும் மாமன்ற உறுப்பினருமான வீரபாகு, நிா்வாகிகள் பொன்ராஜ், ரத்தினம், ஞானாஜ், துரைப்பாண்டியன், சிவசுப்பிரமணியன் உள்பட பலா் பங்கேற்றனா்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர், -முனியசாமி.
Comments