வங்கி தேர்வில் பார்வை மாற்றுத்திறனாளி சாதனை!!


மதுரையில் கலைஞர் நூலகத்தில் 4 மாதங்களாக தினமும் சென்று படித்து வந்த பார்வை மாற்றுத்திறனாளி ஸ்ரீகாந்த், தனியார் வங்கி நடத்திய போட்டி தேர்வில் வென்றதுடன், தனியார் வங்கியில் இளநிலை உதவி மேலாளராக தேர்ச்சி பெற்று பணிக்கு செல்கிறார்.

இது தொடர்பாக பேட்டி ஊடகங்களில் வெளியான நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் அவரை நேரில் சென்று பாராட்டினார்.

2021ல் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற உடனேயே மதுரையில் 215 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்படும் என்று அறிவித்தது. சொன்னபடியே கலைஞர் நூற்றாண்டு நூலகம் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரை நத்தம் சாலையில் நூலக கட்டுமானப் பணிகள் துவங்கியது. அடுத்த ஓராண்டிலேயே நூலகம் கட்டி முடிக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் கடந்த ஆண்டு ஜூலை 15ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. சென்னையில் உள்ள அண்ணா நூலகத்தை போல பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள நூலகம், சுமார் 206 கோடி ரூபாய் செலவில் 6 தளங்களுடன் 2 லட்சத்து 13 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. சுமார் 5 இலட்சம் புத்தகங்கள் வைக்க வசதியுடன் அமைக்கப்பட்ட இந்நூலகத்தில் தற்பொழுது 60 கோடி ரூபாய் மதிப்பிலான 3.5 இலட்சம் புத்தகங்கள் இருக்கின்றன.

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் கலைக்கூடம், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டுக்கூடம், ஓய்வறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, டிஜிட்டல் நூலகம் உள்பட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்காக பிரத்யேக பிரிவு செயல்படுகிறது. இங்கு 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்று வருகிறார்கள.

மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த 25 வயதாகும் ஸ்ரீகாந்த் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாவார். ஸ்ரீகாந்தின் தந்தை மாரிமுத்து ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். ஸ்ரீகாந்த் பி.ஏ., பி.எட்., படித்துள்ளார். இவருக்கு போட்டி தேர்வு எழுதி அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்பது ஆசை. இதை நிறைவேற்ற விரும்பிய ஸ்ரீகாந்த், டி.என்.பி.எஸ்.சி, வங்கி தேர்வு உள்ளிட்ட போட்டித்தேர்வுகளை தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்.

இந்நிலையில் ஸ்ரீகாந்த் 4 மாதங்களுக்கு முன்பாக மதுரை நத்தம் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு போக தொடங்கி உள்ளார். மாற்றுத்திறனாளிகள் பிரிவில் பிரெய்லி முறையில் வடிவமைக்கப்பட்ட போட்டித் தேர்வு புத்தகங்களை ஸ்ரீகாந்த் தொடர்ந்து படிக்க தொடங்கினார். கடந்த 4 மாதங்களாக இடைவிடாது படித்த ஸ்ரீகாந்த் தனியார் வங்கி நடத்திய போட்டி தேர்வில் வெற்றி பெற்று உதவி மேலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக ஸ்ரீகாந்த் கூறுகையில், தனியார் வங்கியின் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று வங்கி உதவி மேலாளராக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் பணியாளர்கள் உதவியுடன் வங்கி தேர்வில் வெற்றி பெற முடிந்தது. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பிரிவில் என்னைப் போன்று மாற்றுத்திறனாளிகள் படித்து போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்" இவ்வாறு கூறினார்.

இதனிடையே அமைச்சர் அன்பில் மகேஷ் ஸ்ரீகாந்தை வெகுவாக பாராட்டி வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டு நூறாவது நாளில் நூலகம் சென்றிருந்தோம். அப்போது மாற்றுத்திறனாளிப் பிரிவில் வாசித்துக்கொண்டிருந்த மாணவன் ஶ்ரீகாந்த் அவர்களைச் சந்தித்தேன். போட்டித் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்தார். இன்று தேர்வில் வெற்றிபெற்று வங்கி உதவி மேலாளர் எனும் பொறுப்பை அடைந்துள்ளார்.                              

நாளைய வரலாறு செய்திகளுக்காக,                  

-தஞ்சாவூர் பாலமுருகன்.

Comments