விஜயாபுரி அரசுப் பள்ளியில் கோள்கள் திருவிழா!!

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விஜயபுரி அரசு உயர்நிலைப் பள்ளியில் கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் சார்பில் கோள்கள் திருவிழா நடந்தது.

தமிழ்நாடு முழுவதும் 2024 இடங்களில் கோள்கள் திருவிழாவை தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி  நடத்தி வருகிறது.விஜயாபுரி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த கோள்கள் திருவிழாவில் மாணவர்களுக்கு கோள்கள் பற்றியும் தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது.கோள்கள் திருவிழா வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை (பொறுப்பு) வாசுகி தலைமை வகித்தார்.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவில்பட்டி அஸ்ட்ரோகிளப் ஒருங்கிணைப்பாளர்கள் முத்துமுருகன், சுரேஷ்குமார் ஆகியோர் வானியல் குறித்தும் தொலைதூர பொருட்களைடெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்தும் பயிற்சி அளித்தனர்.

இதில் ஆசிரியர்கள் லட்சுமணன், செல்வகுமாரி, ராமலட்சுமி,மங்கையர்கரசி உள்பட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

 தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments