கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் கரிஷ்மா கலைத்திறன் போட்டி!!

கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கரிஷ்மா கலைத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியில் பயின்ற முன்னால் மாணவியும் நடிகையும் ஆன அக்‌ஷயா உதயகுமார் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

சந்திரகாந்தி அம்மாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை ஜி.ஆர்.ஜி.கிருஷ்ணம்மாள் கல்லூரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாணவ,மாணவிகளின் கலைத்திறன்களை ஊக்குவிக்கும் விதமாக  பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் கரிஷ்மா 24 எனும் மாபெரும் கலைநிகழ்ச்சி விழா நடைபெற்றது.

கோவை,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கலை நிகழ்ச்சிகள் போட்டிகள்  கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 60 க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 

கரிஷ்மா நிகழ்வாக நடைபெற்ற இதில், ஓவியம், புகைப்படம் எடுத்தல், பட கவிதை விளம்பரப் படப்பிடிப்பு வினாடி வினா,   குழு நடனம் இசைக்குழுக்களின் போர் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இதில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த் மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.கல்லூரி முதல்வர் மீனா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னால் மாணவியும், பிரபல நடிகையும் பிக் பாஸ் போட்டியாளரும் ஆன அக்‌ஷயா உதயகுமார் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

இதில்  ஒட்டு மொத்த கரிஷ்மாவில் சிறந்த பரிசை பி.எஸ்.ஜி.கல்லூரி மாணவிக்கு "கரிஷ்மா" என்ற பட்டம் வழங்கப்பட்டது.

-சீனி, போத்தனூர்.

Comments