குலசேகரநல்லூர் கிராமத்தில் சமுதாய நலக்கூட கட்டிடம் திறப்பு விழாவில் மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்காமல் வஞ்சனை செய்கிறது என கனிமொழி எம்பி குற்றச்சாட்டு. !!!!

 

-MMH

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே குலசேகரநல்லூர் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.33.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூட கட்டிடம்  திறப்பு விழா.  எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


 கனிமொழி எம்பி அவர்கள் பேசியது:

மழைவெள்ளத்தால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டபோது, மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்காமல் வஞ்சனை செய்துவிட்டது என கனிமொழி எம்.பி. தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மகளிருக்கு இலவச பேருந்து பயணம், அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு கல்லூரியில் சேர்ந்து படிக்கும் போது மாதம் ரூ.1000, கலைஞர் பெண்கள் உரிமைத்தொகை திட்டம் என பெண்களின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை தி.மு.க அரசு கொடுத்துக் கொண்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் தூத்துக்குடி மாவட்டம் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது அனைருக்கும் தெரியும். இதனை பார்வையிட மத்திய அமைச்சர்கள் வந்தனர். ஆனால், இதுவரை ஒரு பைசா யாருக்கும் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்து வரிப்பணம் வாங்குகின்றனர். இதில், ரூ.1-க்கு 26 பைசா தான் திருப்பிக் கொடுக்கின்றனர்.


மற்ற பணத்தை கொண்டு போய் உத்தரபிரதேசத்துக்கு கொடுக்கின்றனர். தென் மாநிலங்களை வஞ்சனை செய்யும் திட்டத்தோடு தான் செயல்பட்டுக் கொண்டுள்ளனர். பா.ஜ.க.வில் இருந்து யாராவது வாக்கு கேட்டு வந்தால், வெள்ள நிவாரணத்துக்கு எவ்வளவு கொடுத்துள்ளீர்கள் என கேளுங்கள். தமிழகத்தில் மழை வெள்ள நிவாரணத் தொகை, நிவாரண பொருட்கள், பொங்கல் பரிசு, வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம், மீனவர்களுக்கான வலை உள்ளிட்ட பொருட்கள், விவசாயிகள், வியாபாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உதவிக்கரம் நீட்டிக் கொண்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு ஒரு பைசா கொடுக்கவில்லை. வாங்கிய வரிப்பணத்தையும் திருப்ப கொடுக்கவில்லை. அவர்கள் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி திருப்பித்தர வேண்டிய வரிப்பணத்தை தரவில்லை. இந்த பணத்தை தராமல் தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து வஞ்சனை செய்து வருகின்றனர். மழை வெள்ளம் வந்தபோது என்ன கொடுத்தீர்கள் என பாஜகவினரிடம் மக்கள் கேட்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ்,  பஞ்சாயத் தலைவர் வேலாயுதசாமி,   தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், மண்டல துணை தாசில்தார் திருமணி ஸ்டாலின்,  தமிழ்நாடு மின்சார வாரிய உதவி சேரி பொறியாளர் பேச்சிமுத்து , உதவி பொறியாளர் மணி சேகர், ஒன்றிய திமுக செயலாளர் ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர்  இளையராஜா, ,   கிராம நிர்வாகம் அலுவலர்  கிளை செயலாளர் சமுத்திரகனி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் -முனியசாமி.

Comments