பேரணி அறிவிப்பு!!


சென்னையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி மக்கள் நலப் பணியாளர்கள் பிப்பிரவரி 15ம் தேதி பேரணி அறிவிப்பு!!

திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 2021 சட்டமன்ற தேர்தல்களில் மட்டுமன்றி 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறியபடி மக்கள் நலப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் நிரந்தர பணி வழங்க வேண்டும் என்பதை 

வலியுறுத்தி முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கும் பேரணியை வரும் 15.2 .2024 அன்று சென்னையில் நடத்த உள்ளனர்.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் பொறுப்பாளர் சந்தனகுமார் வெளியிட்ட அறிக்கையில்:

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றக் தேர்தலில் திமுக சார்பில் அறிக்கை தயாரிக்க குழு நியமனம் செய்துள்ளார். அந்த குழுவினர் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து தேர்தல் அறிக்கையில் இடம் பெறவேண்டிய கோரிக்கைகளை பற்றி கேட்ட வருகிறார்கள்.

அதன் அடிப்படையில் நீங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து புறப்பட்டு தலைமைச் செயலகம் நோக்கி செல்லும் மக்கள் நலப் பணியாளர்கள் பேரணியில் தமிழக முழுவதும் உள்ள அனைத்து பணியாளர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்

  -முனியசாமி.

Comments