குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்!! பாசிபிடித்த படிக்கட்டுகளினால் கீழே விழுந்து காயம் அடையும் பொதுமக்கள்!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறையில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் எதிரில் உள்ள பிரியங்கா பேக்கரி அருகே அதாவது நகை கடை வீதி என்று சொல்வார்கள் அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.

இதனால் அந்த பகுதியில் உள்ள படிக்கட்டுகளில் பாசி படிந்து உள்ளது. இந்த படிக்கட்டு வழியாக பொதுமக்கள் செல்லும் பொழுது வழுக்கி விழுந்து காயம் அடையும் ஆபத்து உள்ளது. மேலும் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள்  அவதிப்பட்டு கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இங்கு குடிநீர் வீணாகி கொண்டு இருக்கிறது. 

எனவே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,  

-சி.ராஜேந்திரன் மற்றும் 

வால்பாறை பகுதி நிருபர்,

-திவ்யகுமார்.

Comments