அல்கெமி பப்ளிக் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது!!

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள அல்கெமி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு  விழாவில் மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சியை பார்வையாளர்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் ஒரு அங்கமான அல்கெமி பப்ளிக் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி அருகில் உள்ள பி.பி.ஜி.கல்லூரி அரங்கில் நடைபெற்றது. பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில் நிர்வாக அறங்காவலர் சாந்தி தங்கவேலு,மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் அஸ்வின்,கல்லூரியின் இயக்குனர் அக்‌ஷய்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் பள்ளியின் முதல்வர் விஜயலட்சுமி வரவேற்புரை நல்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை  மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பவானீஸ்வரி கலந்து கொண்டு விழாவில் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் உள்ளபடியே இந்த பள்ளியின் நிர்வாகம் பெரும்பாலும் பெண்களால் நிர்வகிக்கபடுவதை அறிந்து தாம் பெருமைபடுவதாக கூறிய அவர்,பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் சாதித்து வருவதை சுட்டி காட்டினார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


முன்னதாக விழாவில் பேசிய டாக்டர் தங்கவேலு,கல்வி கற்கும் முறை  தற்போது மாறி உள்ளதை குறிப்பிட்ட அவர் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து மாவட்ட,மாநில, சர்வதேச அளவில் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்த அல்கெமி பள்ளி மாணவ,மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

இதில் பல்வேறு வண்ணமயமான ஆடை அணிந்த குழந்தைகளின் ஆடல்,பாடல் கலைநிகழ்ச்சகளை கூடியிருந்த பெற்றோர்கள் மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியின்  இறுதியில் பள்ளியின் துணை  முதல்வர் சித்ரகலா நன்றியுரை வழங்கினார்.

-சீனி, போத்தனூர்.

Comments