கோவை மசானிக் குழந்தைகள் மருத்துவ மையத்தில் புதிய அறுவை சிகிச்சை அரங்குடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்!!


ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மிட்டவுன் மற்றும் மேற்கு உதவியுடன் கோவை மசானிக் குழந்தைகள் மருத்துவ மையத்தில் புதிய அறுவை சிகிச்சை அரங்குடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மசானிக் குழந்தைகள் மருத்துவ மையம் மசானிக் சொசைட்டியாக 1982-ம் ஆண்டில்  துவங்கி தற்போது 25 துறைகளுடன் 50 மருத்துவர்களை கொண்டு இயங்கி வருகிறது.. 

இந்த மருத்துவமனையில் ஆய்வகங்கள்,கதிர்வீச்சியல் துறை, நோயாளிகளுக்கான ஆலோசனைகள்,செவிலியர் பயிற்சி மற்றும் இஇஜி போன்ற வசதிகள் உள்ளன. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் மசானிக் மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை அரங்கை அமைத்து தரவும், இடைக்கால நல மையம் ஒன்றையும், 1.26 கோடி ரூபாய் மதிப்பில் ரோட்டரி கிளப் உதவியுடன் அமைத்துள்ளது. புதிய நல மையத்திற்கான உதவியை கோவை மேற்கு ரோட்டரி கிளப், ஆர். ஐ. 3201 மாவட்டம், பென்டாங் ஆர். ஐ. மாவட்டம் 3300 ஆகியவை இணைந்து 56 லட்சம் ருபாய் மதிப்புள்ள 67,190 டாலர்களை வழங்கின. இந்த நிதியுதவியை, லீமா ரோஸ் மார்ட்டின் நேரடி பரிசாக வழங்கினார். இந்த திட்டத்திற்கு, கோவை மேற்கு, கோவை ஸ்பெக்ட்ரம், கோவை ஜெனித் ரோட்டரி கிளப்களை சேர்ந்த சந்தோஷ் பட்வாரி, சசிக்குமார், கைலாஷ் ஜெயின் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்க அளவு நன்கொடைகளை வழங்கினர். 

இந்த அறுவை சிகிச்சை அரங்கிற்கு தேவையான உபகரணங்களை, கோவை மிட்டவுன் ரோட்டரி கிளப் ஆர். ஐ. மாவட்டம் 3201, கோலாலம்பூர்  ரோட்டரி கிளப் மேற்கு மாவட்டம் 3300 ஆகியவை 73 லட்சம் ருபாய் மதிப்புள்ள 81973 டாலர்களை வழங்கினர். இதை, கொச்சவுசப் தாமஸ் சித்திலப்பள்ளி நேரடி பரிசாக வழங்கினார். மேலும், கோவை மிட்டவுன், கோவை கிழக்கு, கோவை கேலக்ஸி, கோவை வடக்கு மற்றும் கோவை சென்டினியல் ரோட்டரிகிளப் உறுப்பினர்கள் வழங்கினர். உறுப்பினர் ராஜசேகர் ஸ்ரீனிவாஸ் திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க தொகையை வழங்கினார்.இந்நிலையில் மசானிக் மருத்துவமனை அரங்கில் நடைபெற்ற  ,திட்ட துவக்க விழாவில், கிரேண்ட் மாஸ்டர் அனிஷ்குமார் சர்மா, ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்ட 3201 கவர்னர் விஜயக்குமார், தென்னிந்திய மண்டல கிரேண்ட் மாஸ்டர் மனோகரன், கோவை மசானிக் அறக்கட்டளையின் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், ரோட்டரி உறுப்பினர்கள், தலைவர்கள் நாராயணசாமி, நாகராஜன், தேவதாஸ் செர்னிச்சேரி, செயலாளர் கே. தமிழ் செல்வன், கோவை மேற்கு ரோட்டரி திட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி, மிட்டவுன் ரோட்டரி திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

-சீனி, போத்தனூர்.

Comments