நண்பனை கொலை செய்ய முயற்சித்த நபர் கைது!!


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கம்பம் மெட்டு பகுதியில் வசித்து வரும் சந்தோஷ் சக்கரபாணி என்பவர் தனது நண்பருடன் ஏற்பட்ட தகராறு  கார்ணமாக விரக்தி அடைந்ததால் கடந்த வருடம் நவம்பர் மாதம் மனோ என்ற நண்பருடன் சேர்ந்து அவரை கொலை செய்ய முயன்று கத்தியால் குத்திவிட்டு  தப்பி சென்றுள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

காயம் பட்ட அவருடைய நண்பரை மருத்துவமனையில் அனுமதித்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். கொலை முயற்சி செய்த சந்தோஷ்  என்பவர் கம்பம் மெட்டு காவல் துறையினரால் கைது செய்ய முயற்சித்த பொழுது அவர் அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் சென்று தலைமறைவாகி உள்ளார்.

சுமார் இரண்டு மாதங்கள் வனப்பகுதியில் இருந்து வெளியே வரவில்லை. அங்கிருக்கும் விலங்குகளை வேட்டையாடியும் பழங்களை சாப்பிட்டும் அவர் வசித்து வந்துள்ளார். தற்பொழுது அவர் கே. கே. பட்டி அருகே உள்ள வனப்பகுதியில் சுற்றித்திரிவதாக வந்த தகவலின் பெயரில் அவரை தேடி அப்பகுதி போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். இரண்டு மாத காலமாக அவரை கண்டுபிடிக்க முடியாத சிக்கலான சவாலாக காவல்துறைக்கு இருந்த காரணம் அவர் அலைபேசி உபயோகப்படுத்தாமல் இருந்ததும் மற்றும் நபர்களுடன் எந்தவித தொடர்பு வைத்துக்கொள்ளாமல் இருந்ததும் எனத் தெரியவந்தது. தற்பொழுது அவர் சிறையில் அடைக்கப்பட்டார் 

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-ஜான்சன் 

மூணாறு.

Comments