கட்டுமான துறையில் புதிய புரட்சி.. கம்பிகளுக்கு பதிலாக ஃபைபர் பிளாஸ்டிக் முறை தொழில் நுட்பம்..

 

-MMH

கட்டுமான துறையில் புதிய புரட்சி.. கம்பிகளுக்கு பதிலாக ஃபைபர் பிளாஸ்டிக் முறை தொழில் நுட்பம்..கோவையில் நடைபெற உள்ள பில்டு இன்டெக் கண்காட்சியில் காட்சி படுத்த உள்ளதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தகவல்.

கோவை கொடிசியாவில் சர்வதேச கட்டிட மற்றும் கட்டுமான பொருட்களுக்கான  ,பில்டு இண்டெக் கண்காட்சி வரும் 9 ந்தேதி  துவங்கி 12 ந்தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது..13 வது பதிப்பாக நடைபெற உள்ள இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு ஒசூர் சாலையில் உள்ள கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது.

கொடிசியா தலைவர் திருஞானம்,பில்டு இண்டெக் 24 கண்காட்சியின் தலைவர் சிவக்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் ஆகியோர் பேசினர். 

வரும் பிப்ரவரி 9-ம் தேதி துவங்கி 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ள கண்காட்சி மூன்று அரங்குகளில் சுமார்  ஒரு லட்சம் சதுர அடியில் நடைபெற உள்ளதாகவும்,இதில் சுமார்  257  அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.ஆந்தி்ரா,டெல்லி,குஜராத், பஞ்சாப்,கேரளா,தமிழ்நாடு என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 40,000 பார்வையாளர்களை எதிர்பார்ப்பதாக கூறினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கண்காட்சியில்,  கட்டுமான பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் சார்ந்த உபகரணங்கள் நவீன ஆற்றல் கருவிகள் இயந்திரங்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் ,நீர்,கழிவு நீர்,மற்றும் திடக்கழிவு மேலாண்மை பற்றிய நவீன தொழில் நுட்பங்கள்,பர்னிச்சர்கள்,ப்ரீகாஸ்ட் கட்டிடங்கள்,மேம்படுத்தப்பட்ட எம் சாண்ட் வகைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானம் தொடர்பான பொருட்களும் காட்சி படுத்த உள்ளதாக தெரிவித்தனர். குறிப்பாக கட்டுமான துறையில் முக்கிய பயன்பாடாக உபயோகிக்கும் கட்டுமான கம்பிகளுக்கு பதிலாக ஃபைபர் பிளாஸ்டிக் ரூபிங் தொழில் நுட்பம் காட்சி படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்..இந்த சந்திப்பின் போது சசிகுமார்,வள்ளல் ஆகியோர் உடனிருந்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments