கோவை பி.எஸ்.ஜி.ஆர், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு இலவச சீட்!! அறிவிப்பு வெளியாகியுள்ளது!!

கோவை பீளமேடு பகுதியில் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு துறைகளின் கீழ் ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர். 

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு இக்கல்லூரி நிர்வாகம் சார்பில் இலவச சீட் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, தடகளம், வில் அம்பு, கூடைப்பந்து, பேட்மிடன், செஸ், சைக்கிளிங், கோல்ஃப், ஜூடோ, துப்பாக்கி சுடுதல், சிலம்பம், நீச்சல், டேக்வாண்டோ, டேபிள் டென்னீஸ், டென்னீஸ், குத்துச்சண்டை மற்றும் வூஷூ உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு இளங்கலை மற்றும் முதுகலையில் இந்தாண்டு கல்லூரி நிர்வாகம் சார்பில் இலவச சீட் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவிகளுக்கு கல்வி, உணவு, தங்குமிடம், ஸ்காலர்ஷிப், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை கட்டணமின்றி வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பான விவரங்களுக்கு வாட்ஸ்-அப் மெசேஜ் மூலம் பின்வரும் எண்களை தொடர்பு  கொள்ளலாம்:

Dr.M.Jayachitra - 9566442202


Mrs.Suriyaprabha- 8778493054 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments