வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகே குடிநீர் குழாய் உடைப்பு!! பேருந்து பயணிகள் அவதி!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறையில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளின் பயன்பாட்டிற்கு குடிநீர் தொட்டி மற்றும் குடிநீர் குழாய் உள்ளது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த குடிநீர் குழாய் உடைந்து போய் உள்ளது மேலும் இந்த குடிநீர் பிடிக்கும் இடத்தைச் சுற்றிலும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விடுவதனால் குடிநீர் பிடிக்க முடியாமல் பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். 

எனவே உடைந்த குடிநீர் குழாயை சரி செய்து பேருந்து பயணிகளின் தாகத்தை போக்க வேண்டும் என்றும் குடிநீர் பிடிக்கச் செல்லும் இடத்தைச் சுற்றிலும் இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியாதபடி தடுப்புகள் அமைக்க வேண்டும் என்றும் பேருந்து பயணிகள் மற்றும் அப்பகுதி வாகன ஓட்டுநர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன் மற்றும் 

வால்பாறை பகுதி நிருபர் 

-திவ்யகுமார்.

Comments