புல்வாமா தாக்குதலில் இறந்த இராணுவப்பாதுகாப்புபடை வீரர்களுக்கு மலர் தூவி நினைவஞ்சலி!!


இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் புல்வாமா தாக்குதலில் இறந்த இராணுவப்பாதுகாப்புபடை வீரர்களுக்கு மலர் தூவி நினைவஞ்சலி!!

எட்டையபுரம்: கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ந் தேதி ஜம்மு ஸீநகரில் தேசிய நெடுஞ்சாலையில் இந்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் தமிழகத்தைச் சேர்ந்த நாற்பது வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச் சம்பவத்தின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று நாடு முழுவதும் அவர்களின் புகைப்படங்களுக்கு மெழுகுதிரி மற்றும் மலர் தூவி அனுசரிக்கப்படுகிறது. உயிரிழந்த வீரர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி  இராமானுத்து அரசு ஆரம்பப்பள்ளியில் தலைமையாசிரியர் மு.க. இப்ராஹிம் தலைமையில் இன்று மலர்தூவி,மெழுகுதிரி ஏற்றி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

பள்ளி உதவி ஆசிரியை திருமதி இந்திரா உட்பட வன்முறைக்கு எதிரான உறுதிமொழியை வாசிக்க மாணவர்கள் அனைவரும் எடுத்துக்கொண்டனர். முன்னதாக மாணவ மாணவிகளின் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியை ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் திருமுகநாதன் தொடங்கி வைத்தார். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

விளாத்திகுளம் நிருபர் 

-பூங்கோதை.

Comments