கோவை தாஜ் விவாந்தா ஓட்டலில் துவங்கியது ரெட் பேர்ல் சீன உணவு திருவிழா..,

-MMH

கோவை தாஜ் விவாந்தா ஓட்டலில் துவங்கியது ரெட் பேர்ல் சீன உணவு திருவிழா..9 ந்தேதி துவங்கி 10 நாட்கள் நடைபெற உள்ள இதில் சீனாவில் பிரபலமான உணவுகள் பரிமாற உள்ளதாக உணவு கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்..

சீனாவின் மிக முக்கியமான பண்டிகை மற்றும் சில கிழக்கு ஆசிய நாடுகளில் ஒரு முக்கிய நிகழ்வாக,சீனப் புத்தாண்டு டிராகன் ஆண்டாக கொண்டாடபடுகிறது..இந்நிலையில் சந்திர புத்தாண்டு,வசந்த விழா என அழைக்கப்படும் இந்த விழாவை முன்னிட்டு கோவை தாஜ் விவாந்தா ஓட்டலில் சீன உணவு திருவிழா துவங்கியது.. பிப்ரவரி 9 ஆம் தேதி துவங்கி  பிப்ரவரி 18 ஆம் தேதி வரை ரேட் பேர்ல் எனும் தலைப்பில் நடைபெற உள்ள இதில், சீனாவில் உள்ள உணவகங்களில் இருப்பது போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும் வகையிலான வடிவமைப்புகள், 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இசைகளுடன் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.. சீனாவை சேர்ந்த தலைமை உணவு கலைஞர் லியான் லீ தலைமையில் , சீன முறைப்படி உணவுகளை தயார் செய்து காட்சிப்படுத்தியுள்ளனர்.இதில் சீனாவின் முக்கிய உணவுகளான,நான்ஜிங் ஸ்டைல் உப்பு வாத்து, இரட்டை வேகவைத்த மங்கிஹெட் காளான் குழம்பு, கொவ், நூடுல்ஸ் , நண்டு இறைச்சி ,வெங்காய சூப், ஹுலே தாங், மிருதுவான நறுமண வாத்து, சிக்கன் சிங் காவ், டான் ஹுய் சூய் மாய்,  தாய் சின் சிக்கன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பல்வேறு உணவு வகைகள் பரிமாற உள்ளதாகவும்,பொதுவாக கோவை மக்கள் சீன உணவு மீது ஆர்வம் காட்டுவதால் இந்த உணவு திருவிழா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனர்.  சீன உணவு வகைகளை ருசிப்பதற்கான இந்த ரெட்  பேர்ல் உணவு திருவிழா   சீன உணவு பிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

-சீனி, போத்தனூர்.

Comments