கோவை டைடல் பார்க்கில் இரண்டாம் கட்ட நகர்ப்புற காடுகள் வளர்ப்பு திட்டம் துவக்கம்!!

திட்டத்தை கோவை மாவட்ட ஆட்சி தலைவர் திரு. கிராந்திக்குமார் துவக்கி வைத்தார். கோவை டைடல் பார்க்கில் இரண்டாம் கட்ட நகர்ப்புற காடுகள் வளர்ப்பு திட்டத்தில், 20,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. தமிழ்நாடு பசுமை இயக்கம், எச்டிஎப்சி ஆகியவை பரிவர்த்தனை திட்டத்தில் மரக்கன்று நடும் துவக்கத்தை 2023 டிசம்பர் 16-ம் தேதி துவக்கின.

முதல்கட்டட திட்டத்தில் கோவை எல்காட் ஐடி பார்க்கில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. எல்காட், ஓஎஸ்ஆர் லேன்ட் ஆகியவை இணைந்து இதை செயல்படுத்தின. இந்த திட்டத்தில் 45,000 மரக்கன்றுகள் ஒரு கோடி ரூபாய் செலவில் நடப்பட்டன. 

தன்னார்வ தொண்டு நிறுவனமாக ரவுண்ட் டேபிள் ஆப் இன்டியா, ஹோம் ஆப் ஹோப் அமெரிக்காவின் அறக்கட்டளை நிறுவனம் ஆகியவை நிதியுதவி அளித்தன. கோவை ரவுண்ட் டேபிள் ஸ்பார்க் 323, லேடீஸ் சர்க்கிள் ஆப் இன்டியா, கோவை ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் மாவட்டம் 3201, ஆகியவை ஆதரவளித்தன. இந்த மரம் நடும் திட்டத்தை நகர்ப்புற காடுகள் வளர்ப்பு நிறுவனமான கம்யுனிட்ரீ மேற்கொள்கிறது. இந்த அமைப்பு, தென்னிந்திய அளவில் 11 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இரண்டாம் கட்ட திட்டத்தை கோவை மாவட்ட ஆட்சி தலைவர் திரு. கிரந்திக்குமார் ஐ.ஏ.எஸ்., முன்னிலையில் துவங்கியது. எல்காட் நிர்வாக அதிகாரி தனலட்சுமி கவுரவ விருந்தினராக பங்கேற்றார். ரவுண்ட் டேபிள் ஆப் இன்டியா 7-ம் பகுதி முன்னாள் தலைவர் அஸ்வின்குமார், சுற்றுச்சுழல் மகளிர் பிரிவு தலைவர் மணிஷ் வியாஸ், திட்ட பிரதிநிதி தலைவர், ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் ரோஹிணி சர்மா, செயலாளர் முர்துஜா ராஜா, சிஎஸ்ஆர்டி 323 தலைவர் பவுக் பேய்ட், திட்ட தலைவர் கவுசிக், கம்யுனிட்ரீ அமைப்பாளர் ஹபிஸ்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவை ரோட்ராக்ட் கிளப் ஆர்ஐடி 3201 தன்னார்வலர்கள், பல்வேறு பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.

தீவிர மரக்கன்றுகள் நட்டு பராமரித்து, மரக்குகையை உருவாக்குவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். நகர்ப்புற காடுகளை வளர்த்து, இழந்த பசுமையை மீட்பது இதன் நோக்கம். இழந்த பசுமை போர்வையை மீட்டல், தட்பவெப்பநிலையை குறைத்தல், சத்தம், துாசு மாசுகளை களைதல், இயற்கையான குளிர்ச்சி, துாய்மையான காற்று பெறுதல், மனவலிமையும், உடல் வலிமையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்குதல், இயற்கையான வாழ்வாதரங்களையும் உயிரின மண்டலத்தையும் ஏற்படுத்துதல், நிலத்தடி நீர்மட்டத்தை உயரச் செய்தல், மண்வளத்தை மேம்படுத்துதல், இயற்கையின் அழகுமிக்க இடமாக மாற்றுதல் இந்த திட்டத்தின் நோக்கம்.

-சீனி, போத்தனூர்.

Comments