வால்பாறை தொகுதியில் போட்டியிட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு அழைப்பு!!


கோவை மாவட்டம் வால்பாறை தமிழக வெற்றிக் கழக கட்சியின்  ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு வால்பாறை கட்சி அலுவலகத்தில் நடைபெற இருப்பதாக வால்பாறை நகர  கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


இதுகுறித்து வால்பாறை நகர தலைவர் ஆண்ட்ரூஸ் மற்றும் நகரச் செயலாளர் செய்யது அலி  கூறுகையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க வேண்டும் அதே சமயம்  வால்பாறைக்கு பெருமையை தேடித் தந்த முக்கிய நபர்களுக்கு பாராட்டு விழா நிகழ்வும் நடைபெற இருப்பதால் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தனர். 

மேலும் எங்கள் தொகுதியாம் வால்பாறைக்கு களமாட வாருங்கள் வெற்றியை சமர்ப்பிக்கின்றோம் என்று விஜய்க்கு அழைப்பு விடுக்கும் போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார். 

Comments