மூணாறில் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பாக நடத்திய போராட்டத்தில் மாபெரும் வெற்றி!!!

 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மிகப் பிரபல சுற்றுலா தளமான மூணாறு பகுதியில் நேற்றைய தினம் காலை ஆறு முதல் மாலை 6 மணி வரை போராட்டம் அறிவிக்கப்பட்டது. போராட்டத்தின் முக்கிய காரணம் கடந்த தினம்  கன்னிமலை டாப் டிவிஷனை சேர்ந்த சுரேஷ் என்ற மணி இவரை காட்டு யானை தாக்கியதன் காரணமாக மூணாறு டவுனில் நீதி கேட்டு போராட்டம் நடைபெற்றது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

போராட்டத்தை எல் டி எஃப் கட்சி தலைமையிலும் சாலை மறியல் போராட்டத்தை காங்கிரஸ் தலைமையிலும் நடைபெற்றது. போராட்டம் காலையிலேயே தொடங்கியது என்றாலும் மதியம் போராட்டத்தின் முடிவாக மரணமடைந்த நபரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் பணம் ஆகவும் அவர்களின் குடும்பத்தில் யாருக்காவது ஒரு ஆளுக்கு அரசு வேலையும் மற்றும் அடிபட்டவர்களுக்கு மருத்துவச் செலவும் அரசு செலவிலேயே ஏற்றுக் கொண்டது. 

அதைத்தொடர்ந்து மரணமடைந்த நபரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் காசோலையை தேவிகுளம் மண்டலம் அட்வகேட் ராஜா எம்எல்ஏ மற்றும், சட்டசபை உறுப்பினர் எம்.பி டீன் குரிய குரியாகோஸ் தலைமையில் வழங்கப்பட்டது. இறுதியில் போராட்டத்தில் நிறைவு வெற்றி பெற்றது தொடர்ந்து மூணாறு டவுன் எப்பொழுதும் போலவே பொதுவாக செயல்பட துவங்கியது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-மணிகண்டன் கா

மூணாறு,கேரளா

Comments