வடக்கு செவல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா!!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம்,எம்.சண்முகப்புரம் ஊராட்சி,வடக்கு செவல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குழந்தைகள் நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28.20-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர், அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்கள்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், ஸ்ரீனிவாசன் பள்ளி தலைமை ஆசிரியை மெஞ்ஞானசுந்தரி விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சித்திரவேல்,ஆரோக்கியராஜ் ஒன்றிய குழு உறுப்பினர்கள் செந்தூர் பாண்டியன்,மருதக்கனி சுப்பிரமணியன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித் குமார் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் அந்தோணிராஜ்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் எப்ரோமீனாமேரி ஒன்றிய துணைச் செயலாளர் புனிதா ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேசசெல்வின் கிளைச் செயலாளர்கள் பொன்னையா ரவி சரவணன் சேவியர் வன்னியராஜ் சூரங்குடி முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் வைப்பார் சன்னாசி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி பாரதிதாசன் செல்வி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.
Comments